டபுள் ஓகே சொல்ல வைக்கும் வசதிகளுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
டபுள் ஓகே சொல்ல வைக்கும் வசதிகளுடன் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!
வாடிக்கையாளர்களுக்கு ஓர் அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது. சிறந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெயர் போனது சாம்சங்கின் கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள். சாம்சங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனான ஏசிஇ-5830ஐ

என்ற ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 2.3.6 தொழில் நுட்பத்தினை அப்டேட் செய்ய உள்ளது. இந்த வசதியின் மூலம் கூடுதல் சவுகரியத்தினை பெறலாம்.

ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஸ்மார்ட்போன்கள் மொபைல் மார்கெட்டையே கலக்கி கொண்டு இருக்கையில், கூடுதல் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தின் அப்டேட் சவுகரியங்கள் கிடைத்தால் வாடிக்கையாளர்களுக்கு 'டபுள் குஷி' தான்.

சோனி எரிக்சன், எச்டிசி போன்ற நிறுவனங்கள் புதிய புதிய தொழில் நுட்பங்களை அப்டேட் செய்கையில், கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்களின் மூலம் மக்களின் மனதில் சிறந்த இடம் பிடித்த சாம்சங் நிறுவனமும் அதன் யுக்திகளை கையாளாமலா இருக்கும்?

புதிய ஏசிஇ-5830ஐ ஸ்மார்ட்போனில் அப்டேஷன் வசதியை பயன்படுத்த இருக்கிறது சாம்சங். இந்த செய்த நிச்சயம் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கும், சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க துடிப்பவர்களுக்கும் மனதில் ஓர் மகிழ்ச்சியை

ஏற்படுத்தும்.

இந்த கூடுதல் வசதி கொண்ட ஆன்ட்ராய்டு தொழில் நுட்பத்தினை அப்டேட் செய்யும் தேதி இன்னும் சரியாக வெளியாகவில்லை. சாம்சங் நிறுவனம் கூடிய விரைவில் அப்டேஷன் தேதியை வெளியிடும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot