Home
Mobile

பாலிவுட் படங்கள் அப்லோடு செய்யப்பட்ட போன்கள்: ஜி-பைவ் அறிமுகம்

By Super
பாலிவுட் படங்கள் அப்லோடு செய்யப்பட்ட போன்கள்: ஜி-பைவ் அறிமுகம்
டெல்லி: இன்றைய மார்க்கெட்டில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட போன்கள் பெருகிவிட்டன. இருந்தாலும், அவற்றில் முழுமையான பொழுதுபோக்கு இருக்கிறதா என்றால் இல்லை என்று உதட்டை பிதுக்குவோர்தான் அதிகம்.

இதுபோன்று, ஏமாற்றம் அடைபவர்களின் மனக்குறையை போக்கும் வகையில், புதிய மூவீ கிங் சீரிஸ் என்ற வரிசையில் மூன்று போன்களை ஜி-பைவ் அறிமுகம் செய்துள்ளது.

ஆம். இந்த போனில் 20 சினிமாக்கள் அப்லோடு செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. பத்து சூப்பர் ஹிட் பாலிவுட் படங்களையும், 10 ஹாலிவுட் படங்களையும் போனை கையில் வாங்கிய அடுத்த நிமிடம் சுடச்சுட பார்த்து மகிழலாம்.

அடடா, நம்ம தமிழ் படம் எதுவும் பார்க்க முடியாதா என்று ஆதங்கப்பட வேண்டாம். அந்தந்த மண்டலத்தின் பிரபல படங்களை தனது போன்களில் அப்லோடு செய்து விற்கவும் ஜி-பைவ் முடிவு செய்துள்ளது.

மூவி கிங் வரிசையில் இ-680, இ-650 மற்றும் இ-620 குறியீட்டு பெயர்களில் வந்துள்ள இந்த போன்களில், படங்களை அப்லோடு செய்வதற்கு ஏற்ற விதத்தில், 4 ஜிபி மெமரி கார்டு பொருத்தப்பட்டுள்ளது.

தவிர, இந்த போன்களில் 20 ரிங் டோன்கள் மற்றும் 5 'எப்'டிவி வீடியோ கிளிப்பிங்களும் அப்லோடு செய்யப்பட்டுள்ளன.

இதுமட்டுமா, இ-680 போன் டியூவல் சிம் கார்டு வசதிகொண்டது. இது 2.2 இஞ்ச் டச் ஸ்கிரீன் வடிவமைப்புடன் வந்துள்ளது. டியூவல் கேமரா, சக்திவாய்ந்த யமஹா ஆம்ப்ளிஃபையருடன் கூடிய ஸ்பீக்கர், எப்எம் ரேடியோ, ஆடியோ ஜாக் ஆகிய வசதிகளும் இதில் உள்ளன.

மேற்கண்ட அனைத்து அம்சங்களும் இ-620 போனில் பொதுவாக இருக்கின்றன. ஆனால், இதில், உள்ள அனலாக் தொழில்நுட்ப வசதி மூலம் டிவி பார்க்கலாம் என்பது கூடுதல் சிறப்பு.

இ-650 போன் 2.4 இஞ்ச் திரை கொண்டதாகவும் பிளிப் பேஸ் பாடியையும் கொண்டுள்ளது. மற்றபடி, அனைத்து அம்சங்களும் கிங் சீரிஸ் போன்களில் பொதுவானதாக இருக்கிறது.

இவற்றை தவிர, வீடியோ கேம் பிரியர்களுக்கு ஒரு மொபைல்போனை ஜி-பைவ் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜி-20 என்ற குறியீட்டு பெயரில் வந்துள்ள இந்த போனில் மொத்தம் 1,000 வீடியோ கேம்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. இது வீடியோ கேம் விரும்பிகளின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X