Home
Mobile

பட்ஜெட் விலையில் 4 டியூவல் சிம் போன்கள்: ஜிபைவ் அதிரடி

By Super
பட்ஜெட் விலையில் 4 டியூவல் சிம் போன்கள்: ஜிபைவ் அதிரடி
ஒரே நேரத்தில் 4 புதிய டியூவல் சிம் மொபைல்களை களமிறக்கி மார்க்கெட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது ஜிஃபைவ் நிறுவனம். ஜி-115, ஜி-116, ஜி-233, மற்றும் ஜி-505 என்று பெயர் கொண்ட இந்த மொபைல்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் டியூவல் சிம் போன்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையில் வந்துள்ளன.

இதில், இரண்டு போன்கள் பொழுதுபோக்குக்கான மல்டி மீடியா அம்சங்களுடன் மற்ற இரண்டு போன்களில் மல்டி மீடியா வசதிகள் இல்லாமலும் இருக்கின்றன.

ஜி'பைவ் ஜி-115 மொபைல் 1.8 இஞ்ச் திரை வசதி கொண்டது. டிஜிட்டல் சூம் வசதி கொண்ட கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. எப்எம் ரேடியோ, டியூவல் டார்ச், லவுட் ஸ்பீக்கர் போன்ற அடிப்படை வசதிகளைக் கொண்டிருக்கிறது. 4ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியையும் கொண்டிருக்கிறது.

ஜி-115 மொபைல் கொண்டுள்ள அதே சில வசதிகளை ஜி-116 மொபைலும் பெற்றிருக்கிறது. இந்த மொபைல் 3.5 மிமீ ஆடியோ ஜேக் மற்றும் மீடியா பிளேயர் வசதியினை வழங்குகிறது. 16ஜிபி வரை எக்ஸ்டர்னல் சப்போர்ட் கொடுக்கிறது. அதோடு நீடித்து உழைக்கும் பேட்டரி கொண்டது. மீதம் இருக்கும் இரண்டு மொபைல்களும் டியூவல் சிம் வசதி கொண்ட மல்டி மீடியா மொபைல்கள்.

ஜி'ஃபைவ் ஜி-233 மொபைல் 2.2 இஞ்ச் அகன்ற திரை கொண்டது. இன்னும் ஒரு அற்புத வாய்ப்பு என்னவென்றால் இதில் மல்டி லேன்குவேஜ் கீப்பேட் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வசதியாக ஹிந்தியிலும் டைப் செய்து கொள்ளலாம்.

ஆடியோ பிளேயர், வீடியோ பிளேயர், எப்எம் ரேடியோ, வீடியோ ரிக்கார்டிங் வசதி கொண்ட விஜிஏ கேமரா என்று மல்டி மீடியாவிற்கு உண்டான அனைத்து வசதிகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 8ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. தகவல் பரிமாற்றம், 1,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற சவுகரியங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஜி'ஃபைவ் ஜி-505 மொபைலில் இலவசமாக இரண்டு 2ஜிபி கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரத்தியேகமான சிறப்பு என்னவென்றால் 3 கூடுதல் ஸ்பீக்கர்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் துல்லியமாகக் கேட்க முடியும். இதிலும் மீடியா பிளேயர் வசதி உள்ளது.

ஜி-115 மொபைல் ரூ.1,429 விலையிலும், ஜி-116 மொபைல் ரூ.2,459 விலையிலும் இந்திய சந்தையில் கிடைக்கின்றது. மீதம் உள்ள இரண்டு மல்டி மீடியா மொபைலான ஜி233 ரூ.2,169 விலையிலும், ஜி-505 மொபைல் ரூ.2,459 விலையிலும் கிடைக்கின்றது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X