Home
Mobile

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பிஜிட்சூ!

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் பிஜிட்சூ!
மின்னணு சாதன படைப்புகளுக்கென்றே தனி பெயர் பெற்று இருக்கும் ஜப்பானியர்களின் நிறுவனம் பிஜிட்சூ. சர்வதேச மார்கெட்டில் பிஜிட்சூ நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் ப்ரூஃப் வசதி கொண்டது. இதனை 30 நிமிடம் நீரில் மூழ்க வைத்து பரிசோதனை செய்தும் காட்டி இருக்கிறது இந்நிறுவனம்.

பிஜிட்சூ நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனில் ஸ்க்ரேட்ச் கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த விதமான கீறல்களில் இருந்தும் இந்த போனை எளிதாக பாதுகாக்கலாம்.

4.6 அகன்ற திரை வசதியினை கொண்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் அமோல்டு திரை தொழில் நுட்பத்தினை கொண்டது. வாடிக்கையாளர்களிடம் இருக்கும் புகைப்படம் எடுக்கும் ஆர்வத்தினை இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான வகையில் ஊக்குவிக்கும். ஏனெனில் இது 13 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா வசதியினையும் வழங்கும். 6.7 எம்எம் தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொழில் நுட்பத்தினையும் வழங்கும்.

பிஜிட்சூ நிறுவனம் ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது புதியதாக ஏரோஸ் டேப்லட்டையும் உருவாக்கி இருக்கிறது. ஏரோஸ் டேப்லட் 10.1 இஞ்ச் திரையை கொண்டது என்றும், எல்டிஇ தொழில் நுட்பத்தினையும் வழங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த புதிய படைப்புகளில் உள்ள தொழில் நுட்பத்தின் முழு விவரத்தினையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இன்னும் சிறிது காத்திருக்க வேண்டும். ஜப்பானில் வெளியாகி இருக்கும் இந்த ஏரோஸ் டேப்லட் வருகிற ஆகஸ்டு மாதம் உலக அளவில் வெளியாகும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X