Home
Mobile

இலகு எடையுடன் வரும் புதிய பிஜிட்சூ அல்ட்ரா புக்

By Super
இலகு எடையுடன் வரும் புதிய பிஜிட்சூ அல்ட்ரா புக்
பிஜிட்சூ நிறுவனம் எப்போதுமே அமைதியான போட்டியாளராக இருந்து கொண்டு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் போட்டியாளராக இருந்து வருகிறது. அதற்கு காரணம் அதன் தரமான தயாரிப்புகளாகும்.

பிஜிட்சு தனது அடுத்த தயாரிப்பான பிஜிட்சு லைப்புக் எஸ்எச்76/இ என்ற எடை குறைந்த அல்ட்ரா புக்கை அறிமுகப்படுத்துகிறது. இது புதிய நவீன தொழில் நுட்பத்துடன் அதே நேரத்தில் ஏராளமான வசதிகளுடன் வருகிறது.

பிஜிட்சு லைப்புக் எஸ்எச்76/இன் டிசைனைப் பார்த்தால் அது மிக அபாரமாக உள்ளது. இது மெல்லியதாக இருக்கிறது. அதனால் பலரையும் கவரக்கூடிய வகையில் மிக அழகாக உள்ளது. இதன் டிஸ்ப்ளே 13.3 இன்ச் கொண்டு 1366*768 பிக்ஸல் ரிசலூசனைக் கொண்டுள்ளது.

இது இண்டல் ஐ5-2520எம் கோர் சிபியுடன் 2.5ஜிஹெர்ட்சுடன் வருகிறது. இதன் ரேம் 4ஜிபி ஆகும். அதுபோல் மேலும் 4ஜிபி அதிகரிக்கவும் முடியும். இதன் சேமிப்பு வசதி பிரமிக்கக்கூடிய வகையில் உள்ளது. அதாவது இது 128ஜிபி எம்எஸ்எடிஎ எஸ்எஸ்டி சேமிப்பைக் கொண்டுள்ளது.

பிஜிட்சு லைப்புக் எஸ்எச்76/இன் எடையைப் பார்த்தால் அது 1.34 கிலோ மட்டுமே. இது சந்தையில் இருக்கும் மற்ற நெட்புக்குகள் கொண்டிருக்கும் எடையை விட குறைவே. இது 2 யுஎஸ்பி 2.0 போர்ட்டுகளையும் அதே நேரத்தில் ஒரு 3.0 யுஎஸ்பி போர்ட்டையும் கொண்டுள்ளது.

இந்த அல்ட்ராபுக் டி-சப்கனக்டருடன் வருகிறது. அதுபோல் கிகாபிட் எர்த்நெட் போர்ட்டுடனும் வருகிறது. இதன் மைக்ரோஎஸ்டி கார்டு இதன் மெமரியை விரிவுபடுத்துகிறது. அதுபோல் இது ஆடியோ ஜாக்கும் கொண்டுள்ளது.

பிஜிட்சு லைப்புக் எஸ்எச்76/இன் பேட்டரி மிக அபாரமாக இருக்கிறது. அதாவது இதன் 72டிபுள்யுஎச் 6 செல் பேட்டரி 18.2 மணி நேரம் தாங்கும் திறனைக் கொண்டது. மேலும் இந்த அல்ட்ராபுக் வைபை இணைப்பு மற்றும் வைமேக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. இதன் தடிமனைப் பார்த்தால் இது 23.2 மிமீ. மட்டுமே.

பிஜிட்சு லைப்புக் எஸ்எச்76/இன் விலை சற்று அதிகமாகும். அதாவது இதன் ஆரம்ப விலையே ரூ.93800 ஆகும். இந்த மாத இறுதிக்குள் இந்த அல்ட்ராபுக் ஜாப்பானின் சந்தையை அலங்கரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X