16.3 மெகா பிக்ஸல் கேமராவுடன் பிஜிட்சூ ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
16.3 மெகா பிக்ஸல் கேமராவுடன் பிஜிட்சூ ஸ்மார்ட்போன்!
வித்தியாசமான வடிமமைப்பையும், தொழில் நுட்பத்தையும் கொடுத்து அசத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறது பிஜிட்சூ நிறுவனம்.

இந்த நிலையில், எஃப்-02டி என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை வருகிற ஆண்டு அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை அசத்த இருக்கிறது பியூஜிட்சூ..

எஃப்-02டி ஸ்மார்ட்போன் 3.4 இஞ்ச் தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த மொபைலின் திரையில் ஸ்க்ரோலிங் பட்டன் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து இதன் கேமரா துல்லியத்தை கேட்டால் போதும் இதயத்துடிப்பை எகிறச் செய்கிறது.

பொதுவாக ஹைவேரியண்ட் ஸ்மார்ட்போன்களில் அதிகபட்சம் 10 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டிருக்கும்.

ஆனால், இதில் 16.3 மெகா பிக்ஸல் கொண்ட கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இதனால் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு கேமராவை தேட வேண்டிய அவசியம் இருக்காது. அட்டகாசமான புகைப்படங்களை இதில் சுட்டுத் தள்ளலாம். வீடியோவையும் துல்லியமாக பதிவு செய்யலாம்.

பிஜிட்சூ எஃப்-02டி மொபைல் ஒயிட், பிங்க், ப்ளாக் என்று கலர் கலராக கலக்குகிறது. இந்த மொபைலில் 3டி தொழில் நுட்ப வசதியையும் பெற முடியும்.

இதன் உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் 300 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 320 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும்.

இந்த பிஜிட்சூ எஃப்-02டி மொபைல் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் இணையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot