13 மெகா பிக்ஸல் கேமராவுடன் அசத்தும் பிஜிட்சூ மொபைல்

Posted By:
13 மெகா பிக்ஸல் கேமராவுடன் அசத்தும் பிஜிட்சூ மொபைல்
உயர்ந்த தொழில் நுட்பத்தை திறமையாக மக்களுக்கு வழங்கி பாராட்டினை பெற்றுள்ளது ஃபியூஜிட்சு நிறுவனம். வாடிக்கையாளர்களின் தேவையை சரிவர சேவைகளைக் கொடுக்க எப்பொழுதும் இந்நிறுவனம் தயங்குவதே இல்லை.

மக்களை குஷிப்படுத்தும் எஃப்-001 என்ற மொபைலை வெளியிட்டுள்ளது ஃபியூஜிட்சூ நிறுவனம்.

இதில் 3.3 டிஎப்டி திரை தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் எதையும் சிறப்பாகவும், தெளிவாகவும் இந்த மொபைலின் திரையில் பார்க்க முடியும்.

இதில் ஒரு பெரிய வசதி என்னவென்றால் எஃப்-001 மொபைல் டஸ்ட் மற்றும் வாட்டர் பரூஃப் வசதி கொண்டது. இதனால், தண்ணீருக்குள் விழுந்தாலும் கவலைப்பட தேவையில்லை.

மக்களை குஷிப்படுத்த எஃப்-001 என்ற மொபைலை வெளியிட்டுள்ளது ஃபியூஜிட்சு நிறுவனம்.

அதோடு மக்களின் இதயத்துடிப்பை அதிகரிப்பதற்கு இன்னொரு முக்கியமான விஷயமும் இதில் உள்ளது. இதன் கேமராவின் பிக்ஸல் நிச்சயம் அனைவரையும் அசரவைக்கும்.

இதில் 13 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மொபைலுடைய துல்லியத்தை சொல்லி தெரியவேண்டியதில்லை.

உயர்ந்த துல்லியம் கொண்ட கேமரா வாடிக்கையாளர்களை ஒரு ஃபோட்டோகிராஃபராகவே மாற்றிவிடும். இதில், சிஎஓஎஸ் சென்சார் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மொபைல் சிறப்பாக இயங்க 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலில் உள்ள பேட்டரியின் மூலம் 270 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும், 220 நிமிடம் டாக் டைமையும் வழங்குகிறது.

இத்தனை வசதிகளையும் கொடுக்கும் இந்த எஃப்-001 மொபைலின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், இதன் விலை இன்னும் சரியாக அறிவிக்கப்படவில்லை.

இந்த மொபைல் பற்றி வசதிகளை அறிந்து கொள்ள நினைக்கும் வாடிக்கயாளர்கள், இதன் விலையை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆர்வம் கொள்வதும் இயல்பு தான். ஆனால் இதன் விலை தெரிந்து கொள்ள சற்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot