உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புதிய பிஜிட்சூ ஸ்மார்ட்போன்!

Posted By: Staff
உள்ளத்தை கொள்ளை கொள்ளும் புதிய பிஜிட்சூ ஸ்மார்ட்போன்!
சிறந்த தொழில் நுட்பமும் வேண்டும், அதே சமயம் அந்த மொபைலின் தோற்றம் அனைவரையும் கவர்ந்து இழுக்கவும் வேண்டும். அத்தகைய அழகிய போன் வேண்டும் என்று யார் தான் நினைக்க மாட்டார்கள்? இதற்கு வழி வகுத்திருக்கிறது புதிய பியூஜிட்சூ நிறுவனம். அடுத்தவர்கள் கண்களை பிரம்மிக்க வைக்கும் பிம்பத்துடன் இதயத்தில் இடம் பிடிக்க வருகிறது இஎஸ்-12எப் ஸ்மார்ட்போன்.

அடடா! என்று அனைவரது ஆர்வத்தையும் தூண்ட வைக்கும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது இந்த ஸ்மார்ட்போன். 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்னாப்டிராகன் பிராசஸர் இதில் பொருத்தப்பட்டுள்ளது. பெரிய பெரிய தொழில் நுட்பங்கள் கொண்டதாக இருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிகம் கனக்கும் என்று நினைக்க வேண்டும். 103 கிராம் எடை கொண்ட கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன் இது.

480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்துடன் அமோல்டு திரை தொழில் நுட்பத்தினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்! இந்த ஸ்மார்ட்போன் நாளை ஜப்பானில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதயம் கவர வரும் இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் கவர்ச்சிகரமான விலையில் தான் இருக்கும். இந்த இஎஸ்-12எப் பியூஜிட்சூ ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இன்னும் சிறிது நாட்களுக்கு பிறகு சிறப்பான முறையில் வெளியாகும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot