Home
Mobile

Redmi முதல் Motorola வரை.. ஆகஸ்ட் மாதம் வரும் 7 அட்டகாசமான புதிய போன்கள்.. ரெடியா இருங்க..

இந்தியாவில் சீன நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் ரெட்மி, மோட்டோ உள்ளிட்ட போன்களுக்கு இப்போது அதிக வரவேற்பு உள்ளன. காரணம் என்னவென்றால் பட்ஜெட் விலையில் இந்நிறுவனங்கள் 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன.

அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் பட்ஜெட் விலையில் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது வரும் ஆகஸ்ட் மாதம் ரெட்மி முதல் மோட்டோ வரை பல அசத்தலான போன்கள் இந்தியாவுக்கு வருகின்றன. இப்போது ஆகஸ்ட் மாதம் வரும் போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆகஸ்ட் மாதம் வரும் 7 அட்டகாசமான புதிய போன்கள்.. ரெடியா இருங்க..

ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி இந்த ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ரெட்மி 12 5ஜி ஸ்மர்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ( Qualcomm Snapdragon 4 Gen2) சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவு உள்ளது. 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரெட்மி 12 5ஜி போன் அறிமுகமாகும்.

போக்கோ எம்6 ப்ரோ (Poco M6 Pro): ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரம் இந்த போக்கோ எம்6 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிரான 4 ஜென் 2 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5ஜி ஆதரவு, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, 16எம்பி செல்பி கேமரா போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

ரியல்மி ஜிடி நியோ 6 (Realme GT Neo 6): ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்த ரியல்மி ஜிடி நியோ 6 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் 5ஜி ஆதரவைக் கொண்டுள்ளது. அதேபோல் குவால்ம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ், 5200எம்ஏஎச் பேட்டரி, 150 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, ட்ரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த போன் அறிமுகமாகும்.

டெக்னோ போவா 5 (Tecno Pova 5): இந்த அசத்தலான டெக்னோ போவா 5 ஸமர்ட்போன் ஆனது ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. அதேபோல் 6.8-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் இந்த போன் ரூ.12,999-விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் ஃபோல்ட்(OnePlus Fold): ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் துவக்கத்தில் இந்த ஒன்பிளஸ் ஃபோல்ட் போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ஒன்பிளஸ் ஃபோல்ட் போன் ரூ.89,999-விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் வரும் 7 அட்டகாசமான புதிய போன்கள்.. ரெடியா இருங்க..

இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ (Infinix GT 10 Pro): வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜிடி 10 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 6.78 ஃபுல்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 108எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 8050 (MediaTek Dimensity 8050) சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 5ஜி ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் ரூ.20,000-விலையில் இந்த போன் வெளிவரும்.

மோட்டோரோலா ஜி14 (Motorola G14): வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி மோட்டோரோலா ஜி14 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, யுனிசாக் டி616 (Unisoc T616) சிப்செட், 4ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த மோட்டோரோலா ஜி14 போன் அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
From Redmi 12 to Moto G14: 7 New Phones Launching in August 2023: Here's the List : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X