Samsung முதல் Realme வரை: ரூ.15,000-க்குள் கிடைக்கும் 5ஜி போன்கள்.. வாங்க இதுதான் சரியான நேரம்.!

|

இன்னும் சில தினங்களில் நாம் மிகவும் எதிர்பார்த்த 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகமாகும். குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

அதாவது கடந்த திங்கள் அன்று 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிவு பெற்றதை அடுத்து, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளன. எனவே பல செல்போன் நிறுவனங்கள் இனிமேல் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டும்.

சரி இப்போது இந்தியாவில் ரூ.15,000-க்கு கிடைக்கும் அட்டகாசமான 5ஜி போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

5.சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

5.சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட கேலக்ஸி எப்23 5ஜி போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் இன்னும் குறைவான விலையில் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2408 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் போன்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா +2 எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன. குறிப்பாக 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் போன்.

அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க: வேற லெவல் அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் Realme GT Neo 3T.!அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க: வேற லெவல் அம்சங்களுடன் இந்தியாவில் களமிறங்கும் Realme GT Neo 3T.!

4.ரியல்மி நார்சோ 30 5ஜி

4.ரியல்மி நார்சோ 30 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரியல்மி நார்சோ 30 5ஜி போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்தபோன் 6.5 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே, 2408 x 1080 பிக்சல்ஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்டபல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்தரியல்மி போன்.

ரியல்மி நார்சோ 30 5ஜி கேமரா

ரியல்மி நார்சோ 30 5ஜி கேமரா

ரியல்மி நார்சோ 30 5ஜி போன் ஆனது 48 எம்பி பிரைமரி சென்சார் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் போர்ட்ரெய்ட் லென்ஸ் என ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு இந்த போன் 16மெகாபிக்சல் செல்பி கேமரா வசதியை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3.போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

3.போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட போக்கோ எம்4 ப்ரோ 5ஜி போனை ரூ.14,499-விலையில் வாங்க முடியும். போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த போன் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஆனது ஆக்டோ கோர் மீடியாடெக் Dimensity 810 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி
மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கேமரா

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி கேமரா

இந்த போக்கோபோன் 50எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 16எம்பி
செல்பீ கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.

2.iQOO Z6 5G போன்

2.iQOO Z6 5G போன்

iQOO Z6 5G ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

அதேபோல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த iQOO Z6 5G ஸ்மார்ட்போன்.

1.ரெட்மி நோட் 10டி 5ஜி

1.ரெட்மி நோட் 10டி 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த ரெட்மி போன் 6.56-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

குறிப்பாக ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10டி 5ஜி கேமரா

ரெட்மி நோட் 10டி 5ஜி கேமரா

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
From Realme to Samsung: Best 5G Smartphones to Buy Under Rs 15,000: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X