என்னடா இது.. சுந்தர் பிச்சைக்கு வந்த சத்திய சோதனை.. Google Pixel 7a-வை பஞ்சர் ஆக்கிய OnePlus போன்!
என்ன செய்தாலும், இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் சீன ஸ்மார்ட்போன்களை (Chinese Smartphones) மிஞ்ச முடியவில்லையே என்கிற எண்ணம் இந்நேரம் கூகுள் (Google) நிறுவனத்திற்கு வந்திருக்கும். ஏனென்றால், சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான பிக்சல் 7ஏ (Pixel 7a) ஸ்மார்ட்போனின் நிலைமை அப்படி!
மிட்-ரேன்ஜ் (Mid-range) விலைப்பிரிவின் கீழ், இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால் ரூ.43,999 க்கு அறிமுகம் செய்யப்பட்ட பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனானது அதே பிரிவின் கீழ் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும் ஒரு ஒன்பிளஸ் (OnePlus) ஸ்மார்ட்போனை விட சிறப்பானதாக இல்லை என்பதே நிதர்சனம்.

அதாவது கூகுளின் லேட்டஸ்ட் பிக்சல் போனும் கூட இந்திய சந்தையில் பெரிதாக சோபிக்கவில்லை. இப்படியாக பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை பஞ்சர் ஆக்கியது ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 10R) ஸ்மார்ட்போன் தான். ஒன்பிளஸ் 11ஆர் ஆனது ஏன் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனை சிறந்தது என்கிற கேள்விக்கு 4 நியாயமான காரணங்களை முன்வைக்க முடியும்!
01. குறைவான விலை: மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒன்பிளஸ் 11ஆர் ஆனது பிக்சல் 7ஏ-வை விட மலிவானதாக இருக்கிறது. கூகுள் பிக்சல் 7ஏ-வின் சிங்கிள் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.43,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் 11ஆர்-ன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. சிறந்த மல்டிமீடியா எக்ஸ்பீரியன்ஸ்: நீங்கள் சிறிய டிஸ்பிளேவை வெறுப்பவராக இருந்தால், உங்களுக்கு பிக்சல் 7ஏ பிடிக்காது; ஒன்பிளஸ் 11ஆர் தான் உங்களான ஒரே ஒரு தெளிவான தேர்வாக இருக்கும். அதுமட்டுமின்றி ஒன்பிளஸ் 11ஆர் மாடலின் டிஸ்பிளேவானது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. இது பிக்சல் 7ஏ-வின் 90ஹெர்ட்ஸை விட கூர்மையான ரெசல்யூஷனை வழங்கும்.
03. கூடுதல் பெர்ஃபார்மன்ஸ்: ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மறுகையில் உள்ள பிக்சல் 7ஏ ஆனது கூகுளின் இன்-ஹவுஸ் டென்சர் ஜி2 மூலம் இயக்கப்படுகிறது. பெஞ்ச்மார்க் பெர்ஃபார்மன்ஸ் என்று வரும்போது, ஒன்பிளஸ் 11ஆர் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதில் சந்தேகமே வேண்டாம்.
04. சற்றே பெரிய பேட்டரி, சிறப்பான ஃபாஸ்ட் சார்ஜிங்: ஒன்பிளஸ் போன்கள் வேகமாக சார்ஜ் செய்வதில் பெயர் பெற்றவை. அதில் ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போன் ஒரு விதிவிலக்கல்ல. இது ஒரு பெரிய 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. மறுகையில் உள்ள கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனானது சற்றே சிறிய 4,385mAh யூனிட் உடன் வருகிறது.
அதுமட்டுமல்ல ஒன்பிளஸ் 11ஆர் ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 30 நிமிடங்களுக்குள் 0 முதல் 100 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்யும். மேலும் ஒன்பிளஸ் 11ஆர்-ன் பாக்ஸில் 100W பாஸ்ட் சார்ஜர் இடம்பெறும். மறுகையில் உள்ள பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் சார்ஜிங் ஸ்பீட் மெதுவாக இருப்பது மட்டுமல்லாமல், அதன் பாக்ஸில் சார்ஜரும் இடம்பெறாது.


Click it and Unblock the Notifications








