மே 1 முதல் சைனீஸ் 5ஜி போன்கள் கதம் கதம்.. ரூ.11,999-க்கு 5G, 12GB ரேம், 5000mAh பேட்டரி, IP54.. எந்த மாடல்?
மே 1 ஆம் தேதி முதல் இந்திய மார்க்கெட்டில் உள்ள பெரும்பாலான சைனீஸ் 5ஜி போன்களின் கதை முடிகிறது என்றே கூறலாம். ஏனென்றால் இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவா (LAVA) நிறுவனமானது அதன் பிரபலமான பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய 6ஜிபி ரேம் ஆப்ஷனை, மே 1 முதல் விற்பனை செய்யவுள்ளது.
அது லாவா போல்ட் என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போனாகும். கடந்த வாரம் புதிய 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மே 1 ஆம் தேதி மதியம் 12 முதல் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும். விலை, அறிமுக சலுகை மற்றும் அம்சங்கள் குறித்த மேலதிக விவரங்களுக்கு தொடர்ந்து படிக்கவும்.

லாவா போல்ட் என்1 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளது. இது 13-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்ட டூயல் ரியர் கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
லாவா போல்ட் என்1 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை மற்றும் விற்பனை சலுகை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட லாவா போல்ட் என்1 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்ன்ஸ் ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.12,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும் மே 1 முதல் அமேசான் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் ஷாம்பெயின் கோல்ட் மற்றும் ராயல் ப்ளூ கலர் ஆப்ஷன்கள், அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக ரூ.11,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த போன் இந்தியாவில் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது
அவைகள் 4ஜிபி ரேம் + 64ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் ஆகும். இந்த இரண்டு வேரியண்ட்களும் முறையே ரூ.7,499 மற்றும் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை உங்களுக்கு 6ஜிபி ரேம் ஆப்ஷன் அவசியம் இல்லை என்றால், இன்னும் மலிவான 4ஜிபி ரேம் ஆப்ஷன்களில் ஒன்றை வாங்கலாம்.
லாவா போல்ட் என் 1 5ஜி ஸ்மாட்போனின் விரிவான அம்சங்கள்:
- 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2.5டி கிளாஸ் ப்ரொடெக்ஷன்
- 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- ஆக்டா-கோர் யூனிசாக் டி765 பிராசஸர்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 6ஜிபி வரை ரேம்
- 128ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் மூலம் 12ஜிபி வரை ரேம்-ஐ விரிவாக்க முடியும்
- மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஆன்போர்டு ஸ்டோரேஜை 1டிபி வரை விரிவாக்க முடியும்.
- 13-மெகாபிக்சல் ப்ரைமரி சென்சாரை கொண்ட ஏஐ-பேக்டு கேமரா யூனிட்
- 5-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி54 ரேட்டிங்
- ஃபேஸ் அன்லாக் அம்சம்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 5ஜி
- ப்ளூடூத்
- வைஃபை 802.11 b/g/n/ac
- ஓடிஜி
- 10W சார்ஜிங் ஆதரவு
- 5,000mAh பேட்டரி
- அளவீட்டில் 165.85x76.6x8.2மிமீ
- எடையில் 198 கிராம்.


Click it and Unblock the Notifications