Home
Mobile

நல்ல மாசம் பொறக்குது.. மார்ச் 1 - 12 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. 1 இல்ல.. 9 புதிய போன்கள் அறிமுகம்!

புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஐடியாவில் உள்ள அத்துணை பேருக்கும், வருகிற மார்ச் மாதமானது ஒரு "பொன்னான காலமாக" இருக்கப்போகிறது. ஏனென்றால் மார்ச் 1 தொடங்கி மார்ச் 12 ஆம் தேதிக்குள் மட்டுமே மொத்தம் 8 புதிய ஸ்மார்ட்போன்கள் (New Smartphones) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அதென்ன ஸ்மார்ட்போன்கள்? எந்தெந்த நிறுவனம்.. சரியாக எந்தெந்த தேதிகளில் (Launch Date) தங்கள் புதிய ஸ்மார்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும்? அவற்றின் விலை நிர்ணயம் (Price in India) எப்படி இருக்கும்? அவைகள் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? போன்ற விவரங்கள் இதோ:

மார்ச் 1 - 12 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க! 9 புதிய போன்கள் அறிமுகம்!

01. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் (Infinix Smart 8 Plus): இது மார்ச் 1 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது 6000எம்ஏஎச் பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங், 8ஜிபி வரையிலான ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ், டிஸ்பிளேவில் மேஜிக் ரிங், 50எம்பி மெயின் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும். விலையை பொறுத்தவரை ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02. சாம்சங் கேலக்ஸி எப்15 (Samsung Galaxy F15): இது மார்ச் 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த ஸ்மார்ட்போனில் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, 6000எம்ஏஎச் பேட்டரி, 4 முக்கிய ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் போன்ற அம்சங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.14,999 க்கு வெளியாகலாம்.

மார்ச் 1 - 12 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க! 9 புதிய போன்கள் அறிமுகம்!

03. நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): இது மார்ச் 5 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது டைமென்சிட்டி 7200 ப்ரோ சிப்செட், 5000எம்ஏஎச் பேட்டரி, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும். விலையை பொறுத்தவரை இது ரூ.25,000 - ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

04. லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G): இது மார்ச் 5 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே மற்றும் 64 மெகாபிக்சல் மெயின் சோனி சென்சார் உடன் வரும் என்று கூறப்படுகிறது. விலையை பொறுத்தவரை, பெரும்பாலும் இது ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் அறிமுகமாகும்.

மார்ச் 1 - 12 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க! 9 புதிய போன்கள் அறிமுகம்!

05.ரியல்மி 12 பிளஸ் (Realme 12 Plus): இது மார்ச் 6 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது அமோஎல்ஓடி டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 67W சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் பல அம்சங்களை பேக் செய்யும். விலையை பொறுத்தவரை இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

06. ஷாவ்மீ 14 (Xiaomi 14): இது மார்ச் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC), ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) லைக்கா (Leica) பிராண்டிங் கேமரா செட்டப் போன்ற பிரீமியம் அம்சங்களை பேக் செய்யும். கிடைக்கப்பெற் அறிக்கைகளின்படி, இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.60,000 க்கும் மேல் இருக்கும்.

மார்ச் 1 - 12 வரை எந்த போனும் வாங்கிடாதீங்க! 9 புதிய போன்கள் அறிமுகம்!

07 & 08.. விவோ வி30 சீரீஸ் (Vivo V30 series): இது மார்ச் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இந்த சீரீஸின் கீழ் விவோ வி30 மற்றும் விவோ வி30 ப்ரோ என 2 மாடல்கள் இருக்கும். இரண்டுமே 120ஹெர்ட்ஸ் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் ஆதரவு உடனான 50எம்பி ZEISS ரியர் மெயின் கேமரா, 50எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை வழங்கும். விலையை பொறுத்தவரை ரூ.30,000 - ரூ.45,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இருக்கும்.

09. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G): இது மார்ச் 12 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, டைமென்சிட்டி 7200 சிப்செட், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும். விலையை பொறுத்தவரை ரூ.20,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட 9 ஸ்மார்ட்போன்களை தவிர்த்து 2024 மார்ச் மாதத்தில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro) ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து சாம்சங் நிறுவனம் அதன் சாம்சங் கேலக்ஸி ஏ55 (Samsung Galaxy A55) ஸ்மார்ட்போனையும் கூட இந்த மார்ச் மாதமே அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
From March 1 to March 12 Totally 9 New Smartphones are Launching in India Check List Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X