Home
Mobile

ரூ.12,999 முதல் ரூ.1,79,999 வரை.. ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகும் 9 புது போன்கள்.. Google முதல் Redmi வரை!

2025 ஆகஸ்ட் மாதமானது - ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளுக்கு மட்டுமின்றி, புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்களுக்கும் ஒரு பரபரப்பான மாதமாக இருக்க போகிறது. அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இ-காமர்ஸ் தளங்கள் தத்தம் "2025 சுதந்திர தின சிறப்பு விற்பனை"களுக்கான தேதிகளை அறிவித்துள்ளது ஒருபக்கமிருக்க, ஆகஸ்டில் பல புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

அப்படியாக வருகிற 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த நிறுவனங்கள் தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன? அவைகள் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? என்ன மாதிரியான விலை நிர்ணயங்களை பெறும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்:

ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமாகும் 9 புது போன்கள்!

1. கூகுள் பிக்சல் 10 சீரீஸ் (Google Pixel 10 Series): கூகுள் நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று அதன் பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. கூகுள் பிக்சல் 10 சீரீஸின் கீழ் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்

அவைகள் - பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) மாடல்கள் ஆகும். எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை பிக்சல் 10 சீரிஸ் ஆனது ரூ.79,999 முதல் ரூ.1,79,999 வரை செல்லலாம்.

2. விவோ வி60 (Vivo V60): விவோ நிறுவனம் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று அதன் விவோ வி60 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.40,000 க்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை விவோ வி60 ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67 இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப் கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. ஒப்போ கே13 டர்போ சீரீஸ் (Oppo K13 Turbo Series): ஒப்போ நிறுவனம் 2205 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி மற்றும் 20 ஆம் தேதிக்கு இடையில் அதன் ஒப்போ கே13 டர்போ சீரீஸை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரீஸின் கீழ் ஒப்போ கே13 டர்போ மற்றும் ஒப்போ கே13 டர்போ ப்ரோ என மொத்தம் 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டர்னல் கூலிங் ஃபேன் (Internal cooling fan) மற்றும் ஆர்ஜிபி லைட்டிங் (RBG Lighting) போன்ற அம்சங்களுடன் வரும் ஒப்போ கே13 டர்போ ஆனது ரூ.25,000 க்கும் குறைவாகவும், அதே நேரத்தில் டர்போ ப்ரோ மாடல் ரூ.30,000 க்கும் குறைவாகும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4. போக்கோ எஃப்7 அல்ட்ரா (Poco F7 Ultra): போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எஃப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி (Launch Date) குறித்த விவரங்கள் இல்லை.

போக்கோ எஃப்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் உலகளவில் $599 க்கு, அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.51,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரை என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

5. ரெட்மி 15சி (Redmi 15C): ரெட்மி நிறுவனம் அதன் ரெட்மி 15சி ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாத மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹீலியோ ஜி81 சிப்செட், 4 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 எம்பி டூயல் கேமரா செட்டப் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெறலாம். இது ரூ.15,000 க்குள் (ரூ.12,999) என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
From Google Pixel 10 to Redmi 15C Upcoming Mobile Phone Launches in August 2025 in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X