வாங்குனா இந்த ஸ்மார்ட்போன் தான் வாங்கனும்.! ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

|

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக நகரங்களில் ரூ.20K பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக தேவை உள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் வாங்க நினைக்கும் பயனர்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறன் மற்றும் அம்சங்கள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றனர். அதாவது ஸ்மார்ட்போன் பிராண்டுகள், விலை மற்றும் அம்சங்களில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

ஒப்போ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. அதிலும் ரூ.20K பட்ஜெட் விலை புள்ளியில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனை ரூ.18,990-விலையில் வாங்க முடியும்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

ரூ.20K பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதில் என்னென்ன நன்மைகள் உள்ளன

தினசரி வேலைக்கு செல்லும் மக்களுக்கு இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் உதவியாக இருக்கும். அதாவது 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே நீங்கள் காலை உணவை முடிக்கும் முன்பே இந்த போன் சீக்கிரம் சார்ஜ் ஆகிவிடும். அதன்படி 15 நிமிடங்களில் விரைவில் சார்ஜ் செய்யமுடியும் என்று கூறப்படுகிறது. இன்னும் சுருக்கமாக கூற வேண்டும் என்றால் 30 சதவிகிதம் வேகமாக சார்ஜ் ஆகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் 5 நமிட சார்ஜ் 5.5 மணிநேர பேச்சு நேரம் அல்லது 2 மணிநேர YouTube ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. மேலும் 30 நிமிடம் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் 55 சதவிகிதம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். எனவே இதை ஒரு நாள் வரை பயன்படுத்தலாம்.

அதேபோல் இந்த 33 வாட் சார்ஜிங் வசதியை பயன்படுத்தி வேகமாக 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். மேலும் இந்த சார்ஜை சில நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

இந்த அசத்தலான ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வெறும் 72 நிமிடங்களில் இந்த ஸ்மார்ட்போனை 100 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. எனவே ரூ.20K பட்ஜெட் ஸ்மார்ட்போனுக்கு இதுபோன்ற சார்ஜிங் வேகம் கிடைப்பது கடினம் என்று தான் கூறவேண்டும். அதாவது பட்ஜெட் விலையில் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட மிகச்சிறந்த இலகுவான ஸ்மார்ட்போன்

ரூ.20K பட்ஜெட் விலைக்குள் வெளிவந்துள்ள இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த சார்ஜிங் வேகம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. அதாவது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் குறைந்த எடையைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன். குறிப்பாக அனைத்து இடங்களுக்கும் மிக எளிதில் எடுத்துச் சென்று அருமையாக பயன்படுத்த முடியும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் ஆகும். அதேசமயம் இந்த சார்ஜ் கொண்டு இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று

கூறப்பட்டுள்ளது. இன்னும் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பட்ஜெட் விலைக்கு தகுந்த சூப்பர் ஸ்மார்ட்போன் தான் ஒப்போ எஃப்19.

இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளை மேம்படுத்துவதில் கலர்ஓஎஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் புத்திசாலித்தனமான மென்பொருளானது பேட்டரிக்கு சிறந்த பாதுகாப்பு கொடுக்கிறது, அதேசமயம் தேவையில்லாத நேரங்களில் பிரைட்நஸ் வசதியை குறைக்கிறது. மேலும் இதில் உள்ள அல்ட்ரா பவர் சேமிப்பு பயன்பாடு ஆனது இரவு நேரங்களில் ஸ்மார்ட்போனின பேட்டரி ஆயுளை மேம்படுத்துகிறது என்று தான் கூறவேண்டும். அதாவது தேவையான நேரத்தில் மிக அருமையாக உதவும்படி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது தொழில்துறையின் முன்னணி பேட்டரி தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது. அதாவது AI நைட் சார்ஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்றால், ஒருவேளை நீங்கள் சார்ஜ் போட்டுவிட்டு அப்படியே சென்றால் கூட நீண்ட நேரம் சார்ஜ் ஆவதை தடுக்கிறது. அதாவது சார்ஜ் ஆவதை தடைச் செய்கிறது. மேலும் பேட்டரி அதிக வெப்பம் ஆவதைக் கூட இந்த தொழில்நுட்பம் மூலம் தடுக்க முடியும். இதுபோன்ற AI நைட் சார்ஜ் வசதி இருப்பதால் பல ஆபத்துகளை தடுக்க முடியும் என்றே கூறலாம். இந்த அம்சம் நீண்ட காலத்திற்கு பேட்டரி ஆயுளை அதிகரிக்கிறது, இதனால் சார்ஜ் செய்வதற்கு அதிக சார்ஜ் சுழற்சிகள் சேர்க்கப்படுகின்றன.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

ஃபுல் எச்டி பிளஸ் AMOLED பன்ச் ஹோல் டிஸ்ப்ளே

இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதாவது சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை தரும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6.4-இன்ச் எச்டி பிளஸ் AMOLED பன்ச் ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் 90.8% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் சிறந்த-இன்-கிளாஸ் 600 நிட்ஸ் பிரைட்நஸ் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்தவதற்கு அருமையாக இருக்கும். மேலும் மிகச்சிறிய வாட்டர் டிராப் கேமரா (3.688 மிமீ) மற்றும் குறைந்தபட்ச பெசல்கள் (1.60 மிமீ) கொண்டு இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இதில் வாட்டர் டிராப் நாட்ச் ஆனது புதுமையான ஹோல்-பஞ்ச் லைட்ரிங்கையும் கொண்டுள்ளது. இது நீங்கள் செல்ஃபி கேமராவை பயன்படுத்தும்போதும், நீங்கள் அழைப்பைப் பெறும்போது கூட ஒளிரும் என்று கூறப்படுகிறது. உள்வரும் அழைப்புகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, ஒரு சுவாரஸ்யமான அம்சத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

அதிவேக வீடியோ பிளேபேக் மற்றும் கேமிங் அனுபவம்

பிரபலமான OTT பயன்பாடுகளில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் அல்லது தொடர் போன்றவற்றை இந்த ஒப்போ எஃப்19 போனில் பார்க்கும் போது சிறந்த திரை அனுபவம் கொடுக்கும். அதாவது AMOLED FHD + பேனல் இவற்றுள் இருப்பதால் தெளிவானவண்ணங்களை பார்க்க முடிகிறது. அதேபோல் அதிவேக கேமிங் அனுபவத்தை கொடுக்கும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதில் இருக்கும் இன்-டிஸ்ப்ளே கைரேகை 3.0 ஸ்கேனர் 0.5 விநாடிகளுக்குள் ஸ்மார்ட்போனை திறப்பதால் வேகமாக பயன்படுத்த முடியும் என்றே கூறலாம். மேலும் மிகுந்த பாதுகாப்புடன் இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும்.

முக்கியமாக ஒப்போ எஃப்10 சாதனத்தின் டிஸ்ப்ளே தனிப்பயனாக்கப்பட்ட ஸ்மார்ட் பேக்லைட் வசதியைக் கொண்டுள்ளது. இது கண்களில் உள்ள அழுத்தத்தை குறைக்கும் என்றே கூறலாம். மேலும் அனைத்து இடங்களுக்கு தகுந்தபடி இதில் உள்ள பிரைட்நஸ் வசதியை மாற்ற முடியும். எனவே எந்தவொரு கண் சோர்வும் இல்லாமல் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தாலாம். குறிப்பாக வீடியோக்களைப் பார்க்கும்போதும், e-books படிக்கும்போதும், கண் கஷ்டத்தை தடுக்கிறது. குறிப்பாக ரூ.20K பட்ஜெட் விலையில் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை பயனர்களுக்கு கொடுக்கும்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

சிறந்த பாதுகாப்பு வசதி கொண்ட பிரீமியம் வடிவமைப்பு

இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே எங்கேயும் பாதுகாப்புடன் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியம். அதாவது தனித்துவமான மென்பொருள் மற்றும் வன்பொருள் வசதியுடன் இந்த சாதனம்

உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் எடை குறைவாகவும், மெல்லியதாகவும் இருப்பதால் மிகச் சுலபமாக அனைத்து இடங்களுக்கு எடுத்து சென்று பயன்படுத்த முடியம். ஒப்போ பொறியாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் டை-காஸ்டிங் அலுமினிய அலாய் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளனர். எனவே இது நீண்ட வருடம் தாங்கும் ஒரு ஸ்மார்ட்போன் என்றே கூறலாம். மேலும் இதன் மதர்போர்டு அட்டையின் மெல்லிய பகுதியின் தடிமன் 0.21 மி.மீ. என்று கூறப்பட்டுள்ளது.

ஒப்போ எஃப்19 பேட்டரியின் இருபுறமும் உள்ள பொருட்கள் மிகவும் வலுவானவை, மேலும் பக்கங்களை மேலும் குறுகச் செய்வதற்கு இது ஒரு அதிர்ச்சியூட்டும் தோற்றத்தையும் உணர்வையும் தருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 175 கிராம் மற்றும் 7.95 மிமீ தடிமன் கொண்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு அழகாகவும், பிடியில் சுலபமாகவும் இருக்கிறது. அதேபோல் ஃபுல் எச்டி டிஸ்பிளே கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக உள்ளது.

ப்ரிஸம் பிளாக் மற்றும் மிட்நைட் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன். மேலும் ஒரு தனித்துவமான ஸ்மார்ட்போன் அனுபவத்தை கொடுக்கிறது இந்த சாதனம். கச்சிதமாக கைகளில் பயன்படுத்த ஒரு ஸ்மார்ட்போன் என்றால் அது ஒப்போ எஃப்19 சாதனம் தான். மேலும் இது கூர்மையாகவும், நீளமாகவும், உலோக உணர்வோடு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ எஃப்19 மாடல் ஆனது செவ்வக டிரிபிள் யுஐ கேமராக்களுடன் வெளிவந்துள்ளது. பிரீமியம் பாணியில் ஒழுங்கமைக்கப்பட்ட வெவ்வேறு கேமரா சென்சார்கள், சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க உதவுகிறது. அதேபோல் தனித்துவமான மற்றும் பிரீமியம் வடிவமைப்பு, மைக்ரோ எஸ்.டி கார்டு, கைரேகை ஸ்கேனர் மற்றும் 3.5 மிமீ ஹெட்போன ஜாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் ஒப்போ எஃப்19 மாடலில் இடம்பெற்றுள்ளது. இதன் பின்புற பேனல் ஆனது மகிவும் அழகாக உள்ளது என்றே கூறலாம், இதற்குவேண்டி தனிப்பட்ட வன்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, ஒப்போ எஃப்19 இன் பிரமிக்க வைக்கும் வடிவமைப்பு அதன் தோற்றம், செயல்பாடு மற்றும் கேமரா ஆகியவற்றால் உங்களை உண்மையிலேயே மயக்கும்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

அசத்தலான 48எம்பி ரியர் கேமரா

ஒப்போ எஃப் 19 ஸ்மார்ட்போன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த டிரிபிள்-லென்ஸ் கேமரா அதிநவீன ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளைப் பயன்படுத்தி டஜன் கணக்கான காட்சிகளைத் துல்லியமாக அடையாளம் காணவும், அசத்தலான படங்களை எடுக்க உதவும் பொருத்தமான பில்டர்களை பரிந்துரைக்கவும் பயன்படுத்துகிறது. அதாவது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தேவையான இடங்களுக்கு தகுந்த பில்டர்களை பரிந்துரைக்கும், இதன் மூலம் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேபோல் 2எம்பி டெப்த் சென்சார் உதவியுடன் மிகச்சிறிய பொருட்களை கூட அருமையாக படம் பிடிக்க முடியும்.

அதேபோல் இதில் உள்ள 2எம்பி மேக்ரோ சென்சார் பயன்படுத்தி மிகச்சிறிய பொருட்கள், பூக்கள், இதழ்கள் போன்ற அனைத்தையும் துல்லியமாக படம் பிடிக்க முடியும். குறிப்பாக பட்ஜெட் விலைக்கு தகுந்த கேமராக்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த சாதனத்தின் 48எம்பி பிரைமரி சென்சாரை பயன்படுத்தி மிருதுவான பகல் காட்சிகளை மிக அருமையாக படம் பிடிக்கலாம்.

ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது 15 அசத்தலான கேமரா பில்டர்களை கொண்டுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு வசதியுடன் இந்த பில்டர்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த பில்டர்கள் தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். Fresh, Clear, Warm, Mist, Country, Travel, Food, Cool, Forest, City, Vintage, Autumn, Gray, Fade and Black மற்றும் White போன்ற பில்டர்களை இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.

அதேபோல் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஒப்போ எஃப்19 AI Beautification 2.0 உடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக அருமையான செல்பீ படங்களை பிடிக்க உதவுகிறது இந்த ஸ்மார்ட்போன்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

சிறந்த வன்பொருள் மற்றும் சமீபத்திய மென்பொருள்

ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன் ஆனது சக்திவாய்ந்த ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த சிப்செட் வசதி சாதனத்தின் செயல்திறனை 30% -40% வரை மேம்படுத்துகிறது. அதேபோல் உங்கள் ஆப் பயன்பாட்டுத் தேவைகளுக்கு சரியான சாதனத்தைத் தேர்வுசெய்ய சிப்செட் மூன்று வெவ்வேறு ரேம் + ரோம் ((LPDDR4X memory & UFS 2.1 storage) உள்ளமைவுகளுடன் வருகிறது இந்த சாதனம். இந்தியாவில் ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது.

சக்திவாய்ந்த SoC மற்றும் ஏராளமான ரேம் + ரோம் கலவையானது நாள் முழுவதும் தடையற்ற computing மற்றும் multitasking அனுபவத்தை வழங்கும். மேலும் இந்த சாதனத்தில் 'ஹைப்பர் பூஸ்ட்' தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வசதி உங்களது ஸ்மார்ட்போனின் சிறந்த செயல்திறனுக்கு உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் வைஃபை மற்றும் மொபைல் நெட்வொர்க் இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்பட அனுமதிக்கிறது ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போன். இது மிகவும் நிலையான மற்றும் மென்மையான இணைய அனுபவத்தை வழங்குகிறது. மேலும் மோசமான வைஃபை இணைப்பை கண்டறிந்து அதற்கு தகுந்தபடி செயல்படுகிறது இந்த புதிய சாதனம். இணையம் பயன்படுத்தும் பயனர்களுக்கு தனி அனுபவம் கொடுக்கும் இந்த ஒப்போ எஃப்19 மாடல்.

மென்பொருளைப் பொருத்தவரை, அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய கலர்ஓஎஸ் 11 ஐ கொண்டு இயங்கும் ஒப்போ எஃப்19 மாடல். இப்போது அனைத்து ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் தான் அதிகமாக உள்ளது. எனவே இது பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக ஒப்போ எஃப்19 மாடலின் மென்பொருள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.20K பட்ஜெட்ல பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட ஒப்போ எஃப்19.!

ஒப்போ எஃப்19 விலை மற்றும் விற்பனை

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,990-ஆக உள்ளது. மேலும் அமேசான்.இன், பிளிப்கார்ட்.காம், மற்றும் பிற ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும. அதேபோல் ஆஃப்லைன் கடைகளிலும்

இந்த ஒப்போ எஃப்19 மாடலை வாங்க முடியும். மேலும் ஆஃப்லைன் கடைகளில் வாங்கும் பயனர்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் ஆஃப்லைன் கேஷ்பேக் சலுகைகளை பெறமுடியும்.

ஆஃப்லைன் வாடிக்கையாளர்க்கு லாபகர ஒப்பந்தமாக ஒப்போ நிறுவனம் பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது. இதன்மூலம் டபிள்யூ 11 பிரத்யேக விலையில் ரூ.1299 (நிர்ணய விலை ரூ.3999) மற்றும் ஒப்போ என்கோ டபிள்யூ31 ரூ.2499 (நிர்ணய விலை ரூ.5900) என்ற விலையில் வாங்கலாம். அதேபோல் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு முன்னணி வங்கிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் ஒப்போ எஃப்19 வாங்கும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் ஆஃப்லைன் கேஷ்பேக் சலுகை கிடைக்கிறது. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, ஸ்டாண்டர்ட் சாடட் வங்கிகள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது பிளாட் 7.5% கேஷ்பேக் கிடைக்கும். மேலும் பேடிஎம், பஜாஜ் ஃபின்சர்வ் ட்ரிபிள் ஜீரோ ஸ்கீம், ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு உடனடி 11% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் பயனர்கள் வசதிக்கென ஹோம் கிரெடிட், எச்டிபி ஃபைனான்சியல் சர்வீஸ், எச்டிஎஃப்சி வங்கி, கோடக் வங்கி வாடிக்கையாளர் பூஜ்ஜிய கட்டண செலுத்துதல் முறையில் சாதனம் வாங்கலாம். ஒப்போ நிறுவனம் நேர்மையான மற்றும் நியாய சலுகையாக 365 வேலிடிட்டி உடன் ஒரு முறை ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட் செய்யும் வசதியையும் வழங்குகிறது. மேலும் புதிதாக வாங்கப்பட்ட சாதனம் மற்றும் செயல்படுத்தப்பட்ட எஃப்19 சீரிஸ்களுக்கு 180 நாட்கள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதமும் கிடைக்கிறது.

இதுமட்டுமின்றி ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கும் ஏணைய சலுகைகள் உள்ளது. எச்டிஎஃப்சி கிரெடிட்/டெபிட் கார்ட்கள் மற்றும் கிரெடிட் கார்ட் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் சாதனம் வாங்கும்போது ரூ.1500 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும் பயனர்கள் அமேசான் மூலம் வாங்கும் ஸ்மார்ட்போன் அனைத்து பாதுகாப்பு பொருட்களும், பிளிப்கார்ட் ரூ.1 செலுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் அனைத்து பாதுகாப்பு பொருட்களும் கிடைக்கிறது. முன்னதாக ஒப்போ சாதனம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் புதுப்பிப்பு சாதனம் பெற எக்ஸ்சேஞ்ச் சலுகையாக ரூ.1000 கூடுதலாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒப்போ எஃப்19 சாதனத்துடன் ஒப்போ என்கோ டபிள்யூ11 வாங்கும்போது ரூ.1,299-க்கும் (சந்தை விலை:ரூ.1,999) ஒப்போ என்கோ டபிள்யூ 31 ரூ.2499-க்கும் (சந்தை விலை: ரூ.3,499) கிடைக்கிறது. மேலும் பிரத்யேக சலுகையாக ஒப்போ எஃப்19 அமேசான் மூலம் வாங்கும் போது ஒப்போ பேண்ட் ஸ்டைல் ரூ.2499 (சந்தை விலை:ரூ,2,799)-க்கு கிடைக்கிறது.

தீர்வு

ஒட்டுமொத்தமாக ஒப்போ மீண்டும் சமீபத்திய எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் மூலம் ஒரு பிரத்யேகத்தை படைத்திருக்கிறது. அம்சங்கள் மற்றும் செயல்திறன் அடிப்படையில் சந்தையில் கிடைக்கும் பிற ஸ்மார்ட்போன்களை விட ஒப்போ எஃப்19 முன்னிலையில் இருக்கிறது. மிகவும் நம்பத்தகுந்த சப்-20கே ஸ்மார்ட்போனான இது சூப்பர் சார்ஜிங், நேர்த்தியான வடிவமைப்பு, கேமரா, ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களில் மட்டும் அறியப்பட்ட மிகப்பெரிய அம்சங்கள் என அனைத்திலும் ஒப்போ எஃப்19 சிறந்து விளங்குகிறது. நீங்கள் ப்ரீமியம் தர ஸ்மார்ட்போன் வாங்கத்திட்டமிட்டிருந்தால் ஒப்போ எஃப் 19 இறுதித் தேர்வாக இருக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
From Fast Charging To Sleek Design And Style Quotient, OPPO F19 Is The Most Desirable Smartphone Under 20K : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X