Home
Mobile

அட நிஜமா தாங்க.. ரூ.8,000 பட்ஜெட்டில் பக்காவான புது போனை இறக்கிய POCO.. ஏப்ரல் 10 முதல் விற்பனை!

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட் பிரிவில் மீண்டும் கொடிக்கட்டி பறக்க விரும்பும் நோக்கத்தின் கீழ், அதே பிரிவின் கீழ் 'மாஸ்' காட்டும் ரியல்மி, ஒப்போ, சாம்சங் போன்ற நிறுவனங்களை ஓரங்கட்டும் முனைப்பின் கீழ் போக்கோ (POCO) நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நாம் இங்கே பேசுவது போக்கோ சி 51 (Poco C51) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த இந்த புதிய போக்கோ சி-சீரிஸ் ஸ்மார்ட்போனை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும் இதோ:

ரூ.8,000 பட்ஜெட்டில் புதிய POCO போன் அறிமுகம்!

போக்கோ சி51 முக்கிய அம்சங்கள்: வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் டிஸ்பிளேவுடன் வரும் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி36 ப்ராசஸர் (MediaTek Helio G36 SoC) மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் + 64ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் இரண்டு தனித்துவமான கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

சுவாரசியமாக இந்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) அம்சமும் உள்ளது. இதன் மூலம் பில்ட்-இன் ரேமை (Built-in RAM) கிட்டத்தட்ட 7ஜிபி வரை விரிவாக்க முடியும். மேலும் 8எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்புடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் பெரிய 5000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.

போக்கோ சி51 விரிவான அம்சங்கள்: டூயல் சிம் சப்போர்ட் உடன் வரும் போக்கோ சி51 ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் (Android 13 Go Edition) கொண்டு இயங்குகிறது. இது 120ஹெட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.52 இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இதன் டிஸ்பிளேயில் செல்பீ கேமராவிற்கான வாட்டர் டிராப்-ஸ்டைல் ​​நாட்ச் உள்ளது. இது 4ஜிபி ரேம் உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. கேமராவை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 8எம்பி மெயின் கேமரா + ஒரு டெப்த் சென்சார் உள்ளது.

முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மட்டுமே இருந்தாலும் கூட மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் உள்ளது. கடைசியாக, பேக் பேனலில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உடன் இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது.

போக்கோ சி51 விலை, விற்பனை மற்றும் சலுகைகள்: போக்கோ சி51 ஸ்மார்ட்போனின் (4ஜிபி + 64ஜிபி) அசல் விலை ரூ.8499. இருப்பினும் அறிமுக சலுகையின் கீழ் இது ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும். இது பவர் பிளாக் (Power Black) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) கலர் ஆப்ஷன்களில் வருகிற ஏப்ரல் 10 முதல் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
From April 9 New Poco C51 Could Be Best Phone Under Rs 9000 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X