எண் 4-ல் ராசி இல்லை, 3-ல் இருந்து 5-க்கு தாவிய சீன நிறுவனத்தின் 'அடடே' ஸ்மார்ட்போன்.!

Written By:
    X

    ஒன்ப்ளஸ் 5 கருவி - இந்த ஆண்டில் விவாதிக்கக்கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு ஸ்மார்ட்போன் ஆகும். இது ஐபோன் 8 கருவியை பிரதான எதிரியாய் கொண்டு வெளியாகும் நெல்லை வதந்திகள் மற்றும் கசிவுகள் வெளியான வண்ணம் உள்ளன.

    தற்போது வெளியாகியுள்ள தகவலின் கீழ் வரவிருக்கும் இந்த பிளாக்ஷிப் கில்லர் புதிய படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களில் கருவியின் பின்புறத்தில் நமெக்கெலாம் காத்திருந்தது ஒரு ஷாக் ஆன அம்சம். அதாவது வெளியான புகைப்படத்தில் இருந்து ஒரு செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு வெளிப்பட்டுள்ளது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    பொத்தான்

    மேலும் இந்த கசிவு ஒன்ப்ளஸ் 5 ஆனது முதல் தரமான பாதுகாக்கக்கூடிய மற்றும் கவர்ச்சியான ஒரு கவர் கொண்டு இருப்பதைக் காட்டுகிறது. ஒரு எல்இடி ப்ளாஷ் உடனான செங்குத்தான இரட்டை கேமரா அமைப்பு மற்றும் வால்யூம் பொத்தான்கள், பவர் பொத்தான் ஸ்மார்ட்போனின் வலது விளிம்பில் உள்ளது.

    இரட்டை கேமரா அமைப்பு

    ஒன்ப்ளஸ் 5 கருவியின் மிக அற்புதமான அம்சமாக திகழும் இரட்டை கேமரா அமைப்பு டிஎக்ஸ்மார்க் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்பக்கமும் அதே போன்ற ஒரு இரட்டை கேமரா அமைப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    நான்கு என்ற எண்

    இந்த ஒன்ப்ளஸ் 5 ஆனது ஒன்ப்ளஸ் 3டி கருவிக்கு அடுத்ததாக இருக்கும் என்றும் விமர்சகர்கள் மற்றும் நுகர்வோர் எதிர்பார்க்கின்றன. சீனாவில் நான்கு என்ற எண் மோசமான குறைபாடாக கருதப்படுவதால் ஒன்ப்ளஸ் 4 என்ற பெயர் கருவிக்கு சூட்டப்படவில்லை.

    டிஸ்ப்ளே

    ஸ்னாப்ட்ராகன் 835 - க்வால்காமின் சமீபத்திய முதன்மை செயலி மூலம்இயங்கும் இக்கருவி சார்ந்து வெளியான முந்தைய லீக்ஸ் தகவலின் கீழ் இது 5.5 இன்ச் டிஸ்ப்ளே, ஒரு முன் கைரேகை சென்சார் மற்றும் ஒரு குறிப்பிடத்தக்க 3600எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கலாம்.

    ரேம்

    இக்கருவி 5.5 இன்ச் முழு எச்டி சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஒரு க்வாட் எச்டி அம்சம் கொண்டிருக்கவும் சிறிய வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது - 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புகொண்ட ஒரு உயர் இறுதியில் மாதிரி.

    வண்ணங்களில்

    பிளாக், தங்கம், செர்ரி ரெட் மற்றும் ஒன் ப்ளஸ் என்கிற யூனிகார்னால் ஈர்க்கப்பட்ட ஒரு புதிய வண்ணம் என நான்கு வெவ்வேறு வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    Fresh OnePlus 5 images point towards vertical rear dual camera setup. Read more about this in Tamil GizBot.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more