FREE வயர்லெஸ் சார்ஜர்.. ரூ.15000 போனஸ்.. அமோகமாக ஆரம்பித்த Samsung Galaxy S24, S24+, S24 Ultra விற்பனை! விலை?
சொன்னபடியே கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங்கின் புதிய எஸ்24 சீரீஸின் கீழ் மொத்தம் 3 மாடல்கள் வெளியாகியுள்ளன.
சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24), கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Galaxy S24 Plus) மற்றும் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra) ஸ்மார்ட்போன்களின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இம்மூன்று போன்களும் எப்போது முதல் விற்பனைக்கு வரும்? இவைகளை வாங்கும் போது என்னென்ன விற்பனை சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் இந்திய விலை விவரங்கள்: வெண்ணிலா வேரியண்ட் ஆன கேலக்ஸி எஸ்24 ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கும், 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 89,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.99,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும் வெளியாகியுள்ளது. டாப்-ஆஃப்-லைன் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ரூ.1,29,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,39,999 க்கும் மற்றும் 12ஜிபி ரேம் + 1டிபி ஆப்ஷன் ரூ.1,59,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் கலர் ஆப்ஷன்கள்: சாம்சங் கேலக்ஸி எஸ்24 ஆனது அம்பர் யெல்லோ (Amber Yellow), கோபால்ட் வயலட் மற்றும் ஓனிக்ஸ் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் ஆனது கோபால்ட் வயலட் (Cobalt Violet) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) கலர்களில் வாங்க கிடைக்கும்.
ஒருவேளை சாம்சங்கின் ஆன்லைன் ஸ்டோர் (Samsung Online Store) வழியாக இந்த போனை வாங்கினால் ஜேட் கிரீன் (Jade Green) மற்றும் சஃபைர் ப்ளூ (Sapphire Blue) கலர்களிலும் வாங்கலாம். இதற்கிடையில், டைட்டானியம் சேஸ்ஸுடன் (Titanium Chase) கூடிய கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது டைட்டானியம் கிரே (Titanium Grey), டைட்டானியம் வயலட் (Titanium Violet) மற்றும் டைட்டானியம் பிளாக் (Titanium Black) கலர்களில் வாங்க கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மாடலை சாம்சங் நிறுவனத்திடம் அதிகாரப்பூர் ஆன்லைன் ஸ்டோர் வழியாக வாங்கினால் உங்களுக்கு டைட்டானியம் ப்ளூ (Titanium Blue), டைட்டானியம் கிரீன் (Titanium Green) மற்றும் டைட்டானியம் ஆரஞ்சு (Titanium Orange) ஆகிய மூன்று கூடுதல் கலர் ஆப்ஷன்கள் தேர்வு செய்ய கிடைக்கும்.
அனைத்து கேலக்ஸி எஸ்24 சீரீஸ் மாடல்களுமே ஏற்கனவே முன்பதிவு (Pre-booking) செய்ய கிடைக்கின்றன. கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்24 பிளஸ் மாடல்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.22,000 மதிப்புள்ள நன்மைகளை பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 256ஜிபி ஆப்ஷனை முன்பதிவு செய்தால், 512ஜிபி ஆப்ஷனுக்கு ஃப்ரீயாக அப்கிரேட் ஆகும் (Free Upgrade) பலன்களும் அடங்கும்.

மேலும் உங்களுக்கு ரூ.12,000 அப்கிரேட் போனஸும் (Upgrade Bonus) கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடலை பொறுத்தவரை உங்களுக்கு ரூ.15.000 அப்கிரேட் போனஸ் கிடைக்கும். இலவச சலுகையை பொறுத்தவரை, சாம்சங் இந்தியா இணையதளத்தில் தற்போது நேரலையில் உள்ள சாம்சங் லைவ்வில் (Samsung Live) கேலக்ஸி எஸ்24 சீரீஸை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.4,999 மதிப்புள்ள வயர்லெஸ் சார்ஜர் டியோ (Wireless Charger Duo) இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை ஜன.20 நள்ளிரவோடு முடிகிறது.


Click it and Unblock the Notifications








