ஆஃபர்னா இப்படி இருக்கணும்.. இலவச இயர்போன்ஸ்.. ரூ.2000 டிஸ்கவுண்ட்.. அதுவும் லேட்டஸ்ட் iQOO 5G போன் மீது!
அமேசான் இந்தியா வலைத்தளமானது, கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் ஐக்யூ ஸ்மார்ட்போன் மீது சில அபாரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இந்த ஆஃபர், ஏப்ரல் 28 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்பதால் முந்திக்கொள்வது நல்லது!
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது கடந்த மார்ச் 12 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகமான ஐக்யூ இஸட்9 5ஜி (iQoo Z9 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடக்கும் ஐக்யூ க்வெஸ்ட் டேஸ் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, ஐக்யூ இஸட்9 5ஜி மீது சில சிறப்பு சலுகைகள் அணுக கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்9 5ஜி மீது இரண்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று அனைவருக்கும் கிடைக்கும் இலவச சலுகை. மற்றொன்று குறிப்பிட்ட பேங்க் கார்டுகளை கொண்டுள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வங்கி சலுகை. இலவச சலுகையை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.599 மதிப்புள்ள விவோ இயர்போன்ஸ் முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
வங்கி சலுகைகளை பொறுத்தவரை, எஸ்பிஐ வங்கி அல்லது ஐசிஐசிஐ வங்கியின் (SBI or ICICI Bank) கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மற்றும் இஎம்ஐ விருப்பத்தின் கீழ் ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.2000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ்14 கொண்டு இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 1,080 x 2,400 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 394பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 91.90% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ, 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 300ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டிடி-ஸ்டார் 2 பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் போன்ற அம்சங்களும் உள்ளன.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஐக்யூ இஸட்9 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபிLPDDR4X RAM மற்றும் ஏஆர்ஆம் மாலி-ஜி610 ஜிபியு உடனான ஆக்டா-கோர் 4என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7200 5G SoC) மூலம் இயக்கப்படுகிறது. எக்ஸ்டென்டட் ரேம் அம்சத்துடன், இந்த ஸ்மார்ட்போனின் ரேம்-ஐ 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப்/1.79 அபெக்ஷர் உடனான 50-மெகாபிக்சல் Sony IMX882 மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் உடனான 2-மெகாபிக்சல் பொக்கே ஷூட்டரை உள்ளடக்கிய டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 67.78 மணிநேரம் வரை மியூசிக் பிளேபேக் நேரத்தையும், 17 மணிநேரம் வரை யூடியூப் வீடியோ பிளேபேக் நேரத்தையும் வழங்கும். இதில் உள்ள ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பம் ஆனது வெறும் 31 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 50 சதவீதம் வரை நிரப்பும் என்றும் கூறப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார், இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 water and dust resistance rating), டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்றவைகளையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications