Home
Mobile

தலைவர் திமிங்கலம் தானுங்கோ.. Samsung Galaxy S25 சீரீஸில் 4வது போன்.. ஆட்டம் காண போகும் மார்க்கெட்!

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு குறித்த தொடர்ச்சியான தகவல்கள் ஆனது "சும்மாவே எதிர்பார்ப்புகள் எகிறும்.. இப்போ சொல்லவே வேணாம்" என்கிற அளவிற்கு உள்ளன.முதலில் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வின் தேதி (Galaxy Unpacked Event 2025 Date) லீக் ஆனது!

பின்னர் 2025 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன் சீரீஸ் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் (Samsung Galaxy S25 Series) ஹை-எண்ட் மாடலான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) ஸ்மார்ட்போனின் டிசைன் தொடர்பான அட்டகாசமான அப்டேட் வெளியானது.

Samsung Galaxy S25 சீரீஸில் 4வது போன்!

இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக, சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் வழக்கம் போல 3 மாடல்கள் அறிமுகம் ஆகாது; மாறாக மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான இவான் பிளாஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸ் தொடர்பான இத்தாலிய மார்க்கெட்டிங் இமேஜ் ஒன்றை ஆன்லைனில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படமானது சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரீஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகமாகும் என்று பரிந்துரைக்கிறது: சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம்.

கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் டிசைன் தொடர்பான அட்டகாசமான அப்டேட் வெளியானது என்று குறிப்பிட்டு இருந்தோம் அல்லவா அது முழுக்க முழுக்க கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவின் ஸ்லிம் ஆன வடிவமைப்பை பற்றியது தான். ஆக குறிப்பிட்ட மாடல் ஆனது , கேலக்ஸி எஸ்25 அல்ட்ராவாக இல்லாமல் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஆக இருக்கவும் வாய்ப்புள்ளது.

டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (Ice Universe) வழியாக கிடைத்த தகவலின்படி கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது மிகவும் குறுகிய பெசல்களை கொண்டிருக்கும். இது ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் சியோமி 15 போன்ற போட்டியாளர்களில் இருக்கும் பெசல்களை விட மிகவும் ஸ்லிம் ஆன பெசல்களை கொண்டிருக்கும். இது தான் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் ஆக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வு எப்போது நடக்கும்? எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஆல்வின் (@sondesix) பகிர்ந்துள்ள தகவலின்படி சாம்சங்கின் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வானது ஜனவரி 22 ஆம் தேதி நடக்கலாம். இந்நிகழ்வு குறிப்பிட்ட தேதியில் இந்திய நேரடி இரவு 11:30 மணிக்கு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்வில் என்னென்ன தயாரிப்புகள் அறிமுகமாகும்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸின் கீழ் கேலக்ஸி எஸ்25, கேலக்ஸி எஸ்25 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள்.. அல்லது புதிய ஸ்லிம் மாடலுடன் சேர்த்து 4 மொத்தம் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும். மேலும் சாம்சங் நிறுவனத்தின் எக்ஸ்ஆர் ஹெட்செட்டும் கூட காட்சிப்படுத்தப்படலாம்.

விலையை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்25 தோராயமாக ரூ.67,000 க்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் தோராயமாக ரூ.84,000 க்கும் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா தோராயமாக ரூ.1,10,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம். புதிய கேலக்ஸி எஸ்25 ஸ்லிம் மாடலின் விலை குறித்து தகவல் இல்லை. ஆனால் நிச்சயம் இது எல்லாவற்றை விடவும் விலை அதிகமானதாக இருக்கும்.

கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை எஸ்25 அல்ட்ரா மாடலானதுடைட்டானியம் பிளாக், டைட்டானியம் சில்வர் ப்ளூ, டைட்டானியம் க்ரே மற்றும் டைட்டானியம் ஒயிட் சில்வர் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம், மேலும் இது டைட்டானியம் ஜெட் பிளாக், டைட்டானியம் ஜெட் க்ரீன் மற்றும் டைட்டானியம் பிங்க் கோல்ட் ஆகிய கலர்களில் சாம்சங் ஆன்லைன் ஸ்டோரில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படலாம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Fourth Galaxy S25 Phone Could be Galaxy S25 Slim Samsung Unpacked Event Date January 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X