நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ரூ.13,000 வரை விலைகுறைப்பு.!
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,499-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எச்எம்டி குளோபல் நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி நோக்கியா 3.1, நோக்கிய 5.1, நோக்கியா 6.1 போன்ற ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பை அறிவித்துள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விரைவில் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

நோக்கியா 3.1:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11.999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது.

நோக்கியா 3.1 கேமரா:
நோக்கியா 3.1 ஸ்மார்ட்போனில் 1.5ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6750என் மற்றும் 2990எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்டபோன்
வெளிவந்துள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 5.1:
நோக்கியா 5.1 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.14,499-ஆக இருந்தது, தற்சமயம் விலை குறைக்கப்பட்டு ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் மீடியாடெக் ஹீலியோ பி18 செயலி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக 3ஜிபி ரேம் 32ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்டபோன் மாடல். மேலும் 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா 6.1:
3ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது, அதேபோன்று 4ஜிபி ரேம் கொண்ட நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டு
ரூ.16,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா
இவற்றுள் அடக்கம்.

நோக்கியா 8 "சிராக்கோ:
நோக்கியா 8 "சிராக்கோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.49,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.36,999
விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications