நெருங்கும் 4 காலக்கெடுகள் : எதையெல்லாம், எந்த தேதிக்குள் ஆதார் உடன் இணைக்க வேண்டும்.?

By Prakash
|

ஆதார் கார்டினை பலவற்றில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதற்கான கடைசி நாட்களும் அறிவிக்கப்படுகின்றன. மேலும் இவற்றினால் மக்களுக்கு பல நன்மைகள் உள்ளது எனக் கூறப்படுகிறது.

காலக்கெடு : எதையெல்லாம், எந்த தேதிக்குள் ஆதார் உடன் இணைக்க வேண்டும்.?

தனிநபரின் வருமானத்தை கணக்கிட ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது, இதன்படி வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்.

பான்கார்டு:

பான்கார்டு:

ஆதார் அட்டையை பான்கார்டு உடன் இணைக்க கடைசி தேதி வரும் டிசம்பர் 31ஆம் தேதி என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது,
மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி கடைசி என்று அறிவித்த நிலையில் இப்போது மாற்றி டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை பான்கார்டு உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

 வங்கி கணக்கு:

வங்கி கணக்கு:

தனிநபரின் வருமானத்தை கணக்கிட ஆதார் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறியுள்ளது, இதன்படி வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மொபைல்:

மொபைல்:

மொபைல் பயனர்களின் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்க ஆதார் அட்டைய இணைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இப்போது புதிய மொபைல் சிம் கார்டுகளை வாங்கும் போது கண்டிப்பாக ஆதார் தேவைப்படுகிறது. ஆதார் அட்டையை இணைக்க கடைசி தேதி பிப்ரவரி 6, 2018 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சமூக நலத்திட்டங்கள்:

சமூக நலத்திட்டங்கள்:

சமூக நலத்திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நன்மைகள் பயன்படுத்திக்கொள்ள ஆதார் விவரங்களை வழங்குவதற்கான கடைசி நாள்
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறும் திட்டங்கள், எல்பிஜி சிலிண்டர்கள், மானியங்கள் போன்ற திட்டங்களுக்கு ஆதார் கண்டிப்பாக தேவை எனக் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Four deadlines for Aadhaar linking that you must not miss; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X