Home
Mobile

9 கேமரா லென்ஸ் உள்ள போனை வெளியிடும் லைட்! இனி 3 கேமரா போனை மறந்துவிடுங்கள்.!

2015ஆம் ஆண்டுகளில், 16 லென்ஸ் உள்ள கருவி என்ற யோசனை பைத்தியகாரத்தனமாக இருக்கலாம்.

By Vivek Sivanandam

லைட் எல்6 கேமரா வெளியானது நியாபகம் இருக்கின்றதா? டி.எஸ்.எல்.ஆர் புகைப்படங்களை போன்ற புகைப்படத்தை எடுக்க 16 கேமார சென்சார்களுடன் அந்த கருவி வெளியானது. தற்போது அதே நிறுவனம் 9 கேமரா சென்சார்கள் உள்ள ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது.

9 கேமரா லென்ஸ் உள்ள போனை வெளியிடும் லைட்.!

2015ஆம் ஆண்டுகளில், 16 லென்ஸ் உள்ள கருவி என்ற யோசனை பைத்தியகாரத்தனமாக இருக்கலாம். ஆனால் இன்றைய சூழ்நிலையில், ஹவாய் போன்ற நிறுவனங்கள் 3 கேமரா சென்சார்கள் கொண்ட பி20 ப்ரோ போன்றவற்றை வெளியிட்டுவரும் நிலையில், வரும் நாட்களில் அதுவும் சாத்தியமாகும் என்றே தெரிகிறது. 5 முதல் 9 கேமரா லென்ஸ்கள் உள்ள ஸ்மார்ட்போனை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுவருவதாக லைட் நிறுவனம் கூறியுள்ளது.

1000டாலர்

1000டாலர்

நமக்கு உறுதியாக என்ன தெரியும் என்றால் இந்த ஸ்மார்ட்போனை வாங்க அதிர்ஸ்டம் இருக்கவேண்டும், ஏனெனில் லைட் எல்16 கேமராவின் விலை 2000 டாலராக இருந்தது. அதேநேரம் இந்த புதிய ஸ்மார்ட்போனை அந்த கேமராவுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவிலான கேமராக்களே இருப்பதால், விலை குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனாலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை 1000டாலர் என்பதற்கு அதிகமாகவே இருக்கும்.

ரெசல்யூசன்

ரெசல்யூசன்

எல்16 கேமராவை பற்றி கூறவேண்டும் என்றால், கைக்கு அடக்கமான அது பல்வேறு போகஸ் தூரங்களுக்கு ஏற்ப புகைப்படம் எடுக்கக்கூடியது. பின்னர் அல்காரிதம்களை பயன்படுத்தி 10 புகைப்படங்களை அதிக ரெசல்யூசன் உள்ள ஒரே புகைப்படமாக இணைக்கவல்லது. இது ஸ்ட்ரைக்கிங் தகவல்கள், சிறந்த வண்ணங்கள் மற்றும் குறைந்த சப்தம் போன்றவற்றுடன் அதிக தரம் வாய்ந்த புகைப்படங்களை தரவல்லது. 52மெகா பிக்சலுக்கும் அதிகமாக இருப்பதால் ஜூம், க்ராப், என்லார்ஜ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சுதந்திரமாக பயன்படுத்த அனுமதிக்கிறது.

மாடியூல்

மாடியூல்

நீங்கள் ஜூம் இன் அல்லது அவுட் செய்யும் போது, உங்கள் படத்தில் எல் 16 தனக்கு தேவையான 28mm,70mm,150mm கேமரா மாடியூல்களில் சிறந்த இணையை தேர்ந்தெடுக்கிறது. மேலும் டெப்த் அளவை மாற்ற செய்து, புகைப்படத்தின் பின்புலத்தை தேவையான அளவு ப்ளர் செய்து தருகிறது. ஸ்மார்ட்போன்களில் உள்ள மென்பொருளை போலவே எல்16ம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 3 கேமரா செட்டப்

3 கேமரா செட்டப்

ஹவாய் நிறுவனம் தனது பி20 ப்ரோவில் 3 கேமரா செட்டப்பை செய்ய முயன்றுள்ளது. அதில் 20MB மோனோக்ரோம் மற்றும் 40MB முதன்மை லென்ஸ் இரண்டும்ஒரே இணைப்பை பகிர்ந்துகொள்கின்றன. அதேநேரம் 8MB டெலிபோட்டோ லென்ஸ் தனி மதர்போர்டு இணைப்பை பெற்றுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் சரியாக இணைப்புகளை திட்டமிடவில்லை என தெரிகிறது.மேலும் சாதாரண டூயல் கேமரா இணைப்பில் புதிய இணைப்பை ஏற்படுத்துவதும் மிககடினம்.

Best Mobiles in India

English summary
Forget triple camera setups Light to launch a phone with nine camera lenses: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X