அதிரடி : ரூ.17,990/-க்கு ஐபோன் எஸ்இ; நம்பி வாங்க பல காரணங்கள் உள்ளன.!

|

ஒரு லட்சத்து இரண்டாயிரம் ரூபாய் என்ற விலை நிர்ண்யம் சமீபத்தில் வெளியான ஐபோன் எக்ஸ் ஹை எண்ட் மாதிரி மீதான நமது பேராசையை, நப்பாசையாக்கி விட்டது. அதன் பெஸல்லெஸ் வடிவமைப்பு, ஏஆர் தொழில்நுட்பம் மற்றும் ஓல்இடி டிஸ்ப்ளே நம்மை ஈர்க்க மறுபக்கம் அதன் விலை நம்மை துரத்தி துரத்தி அடிக்கிறது.

அதிரடி : ரூ.17,990/-க்கு ஐபோன் எஸ்இ; நம்பி வாங்க பல காரணங்கள் உள்ளன.!

மிகவும் தீவிரமான மேம்படுத்தல்களுடன் களமிறங்கியுள்ள ஐபோன் எக்ஸ் சாதனத்தின் குறைந்த பட்ச மாதிரியே ரூ.89,000/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள நிலைப்பாட்டில் "இதுவொரு பாதகமான விடயம்" என்று புலம்புவதை நிறுத்தி, இதில் என்னென்ன சாதகங்கள் உள்ளன என்பதை பற்றி கொஞ்சம் யோசியுங்கள்.

சாதகம்.?

சாதகம்.?

இதில் என்ன சாதகம் இருக்க போகிறது என்று கேட்கிறீர்களா.? - இருக்கிறது. பொதுவாகவே புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்த கையேடு பழைய ஐபோன் மாடல்களின் விலை குறையும். அதிலும் இம்முறை ஐபோன் எக்ஸ் சாதனத்தின் விலை மிக மிக அதிகாமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், பழைய மாடல்களின் விலை மிக மிக குறையும். இது நமக்கு சாதகம் தானே.?

வெறும் ரூ.17,990/-க்கு

வெறும் ரூ.17,990/-க்கு

அப்படியாக மிகவும் விலை குறைந்துள்ள ஒரு மாடல் தான் - ஐபோன் எஸ்இ, ஆப்பிள் நிறுவனத்தின் ஆகச்சிறந்த மாதிரிகளில் ஒன்றான இது தற்போது வெறும் ரூ.17,990/-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கண்ணியமான கேமரா

கண்ணியமான கேமரா

எத்தனை புதிய ஐபோன்கள் வந்தாலும் ஐபோன் எஸ்இ சாதனத்தின் காலமற்ற வடிவமைப்பு மற்றும் கண்ணியமான கேமராக்கள் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. மிகவும் கவனிக்கபப்டும் சாதனமான ஐபோன் எஸ்இ ஆனது "நடைமுறைப்படி" ஐபோன் 6எஸ் சாதனத்தை விட விலை மதிப்பானது மற்றும் ஐபோன் 5எஸ் உடலின் உள்ளே இருக்கும் பொருட்களை விட விலை மதிப்பானதாகும்.

காலமற்ற வடிவமைப்பு

காலமற்ற வடிவமைப்பு

பெரும்பாலான ஆப்பிள் விசுவாசிகள் இன்னும் ஐபோன் 5 / 5எஸ் சாதனத்தை மிகவும் சிறந்த ஐபோன்களாக கருதுகின்றனர் மற்றும் மேலும் ஐபோன் எஸ்இ சாதனத்தை மிகவும் நேர்த்தியான மற்றும் காலமற்ற வடிவமைப்பை கொண்டுள்ளதாக கருதுகின்றனர்.

ஏ9 சிப்செட்

ஏ9 சிப்செட்

நம்பினால் நம்புங்கள் ஐபோன் எஸ்இ ஆனது ஐபோன் 6எஸ்-ல் காணப்படும் அதே வேகமான மற்றும் திறமையான ஏ9 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இதன் குறைந்த பிக்சல் அளவு (4 அங்குல ரெட்டினா டிஸ்பிளே) அதன் மூத்த சகோதரர்களை விட வேகமாக செயல்படுகிறது.

ஐஓஎஸ் 11

ஐஓஎஸ் 11

அடுத்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் விற்பனை செய்யப்பட்டாலும் கூட இக்கருவி ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய இயக்க முறைமையான ஐஓஎஸ் 11 கொண்டு எந்த பிரச்சினைகளும் இன்றி வேலை செய்யும்.

12எம்பி  பின்புற கேமரா

12எம்பி பின்புற கேமரா

இமேஜிங் துறையை பொறுத்தமட்டில், 5 எலிமெண்ட்ஸ் லென்ஸ் மற்றும் ஐபோன் 6 களில் காணப்படும் ட்ரூ டோன் பிளாஷ் அம்சங்கள் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. ஐபோன் எஸ்இ சமீபத்திய ஐபோன்களுடன் போட்டியிட முடியாது என்றாலும் கூட, இன்றும் அழகான படங்களை உற்பத்தி செய்யும் வல்லமை கொண்டுள்ளது.

கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

ரூ.17,990/- என்ற விலைக்கு ஐபோன் எஸ்இ சாதனத்தை விட சிறந்த புகைப்படங்களைக் கிளிக் செய்யும் ஒரு கருவியை கண்டுபிடிப்பது சற்று கடினம் தான். இதன் அழகான 4 அங்குல ரெட்டினா டிஸ்பிளேவின் ஹோம் பொத்தானுடன் உட்பொதிக்கப்பட்ட ஒரு கைரேகை சென்சார் உள்ளது. ஆக, ஐபோன் எஸ்இ சாதனத்தை நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Forget iPhone X, iPhone SE at Rs 17,990 is a steal deal. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X