பரம திருப்திக்கு ஓர் புதிய ஃப்ளை மொபைல்!

By Super
|

பரம திருப்திக்கு ஓர் புதிய ஃப்ளை மொபைல்!
தொழில் நுட்பங்கள் புதிது புதிதாக உருவானாலும் டியூவல் சிம் நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல்களுக்கு வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. ஃப்ளை நிறுவனம் வாடிக்கையாளர்கள் திருப்தி அடையும் வகையில் மொபைல்களை கொடுத்துள்ளது.

எம்வி-242 என்ற பெயரில் புதிய மொபைலை உருவாக்கி உள்ளது ஃப்ளை நிறுவனம். இது 2.4 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைலாகும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. இதனால் சிறந்த புகைப்படத்தை நிச்சயம் தர முடியும். இந்த மொபைலில் 3ஜி வசதி இல்லை. ஆனால் ஆடியோ பிளேயர், எப்எம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களை பெற இதில் தொழில் நுட்ப வசதி உள்ளது.

எல்ஐ-அயான் 1,400 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் 10 மணி நேரம் டாக் டைம் மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் பெற முடியும். எல்லா வாடிக்கையாளர்களும் எளிதாக பெற்று பயனடைய இந்த எம்வி-242 மொபைல் சிறந்ததாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் விலை கூடிய விரைவில் வெளியாகும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X