Home
Mobile

வெறும் 85 கிராம் எடையில் புதிய ப்ளை டியூவல் சிம் போன்

By Super
வெறும் 85 கிராம் எடையில் புதிய ப்ளை டியூவல் சிம் போன்
சமீபத்தில் ஒரு புதிய மொபைலை வெற்றிகரமாக வெளியிட்ட ஃப்ளை நிறுவனம், அடுத்து ஒரு புதிய மொபைலை வெளியிட்டு மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தாயாரிக்கப்படும் எந்த பொருளுக்கும் ஒரு தனி வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது. இதனால் ஜிஎஸ்எம் நெட்வொர்க் வசதி கொண்ட மொபைலுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. இந்த நெட்வொர்க் வசதியினால் டியூவல் சிம் தொழில் நுட்பத்தைப் பெற முடியும்.

இப்படிப்பட்ட டியூவல் சிம் கார்டு வசதியைக் கொடுக்கும் புதிய இ-322 மொபைலை வெளியிட்டுள்ளது ஃப்லை நிறுவனம். 85 கிராம் இலகு எடை கொண்ட இந்த மொபைல், கியூவிஜிஏ டிஎப்டி தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள புதிய மொபைல்.

எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனப் பொருட்களையும் மக்கள் அதிகம் பயன்படுத்த முக்கிய காரணமே நேரத்தை மிச்சப்படுத்திக் கொடுப்பதாலும், வேலையை சுலபமாக்குவதாலும் மட்டுமே.

அதன் அடிப்படையில் கணிசமாக டியூவல் சிம் கார்டு வசதிக்கு சப்போர்ட் செய்வதனால் இரண்டு மொபைல்களைக் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இரண்டு சிம் வைத்திருப்பவர்கள் மொபைலை கழற்றி சிம் கார்டுகளை மாற்றி நேரத்தை வீணடிக்க வேண்டியதும் இல்லை.

பொன்னான தருணங்களை புகைப்படமாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து கொள்ள இதோ 2 மெகா பிக்ஸல் கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

மிக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமரா ஆதலால் இது 1600 X 1200 பிக்ஸல் துல்லித்தைக் கொடுக்கிறது. மல்டி ஃபார்மெட் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் டிஜிட்டல் சூம் தொழில் நுட்பத்தையும் வழங்குகிறது.

நிறைய தகவல்களையும், ஃபைல்களையும் ஸ்டோர் செய்து பயண் பெற நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு வேலையை எளிதாக்கும் வகையில் 2.19 எம்பி வரை சப்போர்ட் செய்யும் இன்டர்னல் மெமரி வசதியும் இதில் உள்ளது. அதோடு 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரியும் உள்ளது.

பேட்டரியின் திறனை வைத்து மொபைல்களைத் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர். அந்த வகையில் 1,400 எம்ஏஎச் பேட்டரி கொண்டது இந்த இ-322 மொபைல். இதனால் 300 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 14 மணி நேரம் 30 நிமிடம் பேட்டரி பேக்அப் வசதியும் கொடுக்கிறது.

நெட் வசதியினைப் பெற வைபை தொழில் நுட்பம், தகவல் பரிமாற புளூடூத், கணினியில் உள்ளவற்றை பதிவேற்றம் செய்ய யூஎஸ்பி, மொபைல் டிராக்கர் போன்ற வசதிகளுடன் இந்த இ-322 மொபைலை வாடிக்கையாளர்கள் ரூ.3,000 ஒட்டிய விலையில் பெற்று பயணடையலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X