குறைந்த விலையில் டூவல் சிம் போனை வழங்கும் ப்ளை மொபைல்

இந்தியாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான ப்ளை மொபைல் சமீபத்தில் டூவல் சிம் வசதி கொண்ட ஒரு புதிய மொபைலைக் குறைந்த விலைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த போனிற்கு ப்ளை இ281என் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 3டி வசதியுடன் வரும் இந்த போன் ரூ.3,499க்கு விற்கப்படுகிறது.
குறைந்த விலைக்கு வந்தாலும் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதில் பொழுதுபோக்கிற்காக 5 திரைப்படங்களும், 25 பாலிவுட் வீடியோக்களும், 25 ரீஜனல் வீடியோக்களும், 20எம்பி3 ட்ராக்குகளும், 2 இ-புக்குகளும் மற்றும் 12 வால் பேப்பர்களும் உள்ளன.
2.8 இன்ச் தொடுதிரையுடன் வரும் இந்த போனில் 3.5எம்எம் ஆடியோ ஜாக், மியூசிக் ப்ளேயர், ப்ளாஷ் வசதியுடன் கூடிய 1.3எம்பி கேமரா, பதிவு செய்யும் வசதியுடன் கூடிய எப்எம் ரேடியோ, ப்ளூடூத், எ2டிபி, மெமரியை 32ஜிபி வரை விரிவுபடுத்துக்கூடிய வசதி, 3டி வால் பேப்பர், 3டி டெமோ க்ளாசஸ் மற்றும் ஆட்டோ கால் ரிக்கார்டிங் போன்ற ஏராளமான வசதிகளைப் பார்க்கலாம்.
மேலும் இந்த போன் நீடித்த இயங்கு நேரத்தையும் வழங்குகிறது. அதோடு கையெழுத்து ரெகக்னிசன், பன் டச் கேம் ஸ்டேசன்ஸ், மூவி ப்ளேயர் மற்றும் பெதர் டச் கீகள் போன்ற சாப்ட்வேர்களும் இந்த போனில் உள்ளன.
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications