புதிய ஃப்ளை மொபைல்... சிம்ப்ளி சூப்பர்!

By Super
|

புதிய ஃப்ளை மொபைல்... சிம்ப்ளி சூப்பர்!
தொழில் நுட்பத்தினை தேடும் வாடிக்கையாளர்களை, மொபைலின் அழகான வடிவமைப்பு கொஞ்சம் ஈர்க்கத்தான் செய்கிறது. இந்த ஈர்ப்பை பெற கவர்ச்சிகரமான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது புதிய ஃப்ளை டிஎஸ்-109 மொபைல். இந்த மொபைல் ஜிஎஸ்எம் தொழில் நுட்பம் கொண்டது.

இது 1.8 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்டது. இந்த திரை நிச்சயம் சிறந்த துல்லியத்தை வழங்கும். ஏனென்றால் இது 1280 X 1024 பிக்ஸல் திரை துல்லியத்தினை தரும். இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் அழகான புகைப்படம், வீடியோ வசதி, டிஜிட்டல் சூம் போன்ற வசதிகளையும் பெற முடியும்.

ஆடியோ, வீடியோ ப்ளேயர், எப்எம் போன்ற பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் உள்ளது. இதனால் இனிமையான விஷயங்களை பார்த்தும் கேட்டும் மகிழலாம். இன்டர்நெட் வசதி பற்றிய கவலையும் இந்த மொபைலில் இல்லை. இதில் ஜிபிஆர்எஸ் வசதி உள்ளது.

ஸ்டான்டர்டு 1100 எம்ஏஎச் எல்-ஐ அயான் வி2.0 பேட்டரி 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 168 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் வழங்கும். இத்தனை வசதிகளை வழங்கும் இந்த மொபைல் இன்னும் இந்தியாவில் வெளியாகவில்லை.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X