ரூ.11,000ல் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்!

சிறப்பான முறையில் தொழில் நுட்பங்களை கொடுத்து வரும் நிறுவனங்களில் இந்த ஃப்ளை நிறுவனமும் ஒன்று. இந்த
பிளாக்பெர்டு ஸ்மார்ட்மொபைல் ஆன்ட்ராய்டு 2.3.4 வெர்ஷன் கொண்ட மொபைல். இதனால் எந்த அளவுக்கு சிறந்த தொழில் நுட்பம் பெற முடியுமோ அந்த அளவுக்கு நவீன தொழில் நுட்பத்தினை பெறலாம்.
இது டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன். இதனால் இரண்டு நெட்வொர்க் வசதிக்கு ஒரே நேரத்தில் சப்போர்ட் செய்ய முடியும்.வாடிக்கையாளர்களின் மனதை நொடிபொழுதில் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது. அத்தகைய வடிவமைப்பை பெற்றது. டியூவல் சிம் வசதி மட்டுமல்ல, டியூவல் கேமரா வசதியினையையும் கொடுக்கும். இதன் 600 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர், இதில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எளிதாக இயங்க வைக்கிறது.
பிரம்மிக்க வைக்கும் அழகாக தோற்றத்தை கொண்ட இந்த மொபைல் 3.5 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையை கொண்டிருக்கிறது. இத்தகைய அகன்ற திரை வசதியினை கொண்டதால் அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ண வேண்டாம்.
இந்த பிளாக்பெர்டு ஸ்மார்ட்போன் 120 கிராம் எடையை கொண்டது. இதில் 3 மெகா பிக்ஸல் கேமராவும், 0.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவும் உள்ளது. இதனால் சிறந்த வீடியோ காலிங் வசதிக்கும், அழகான புகைப்படத்துக்கும், தெளிவான வீடியோவிற்கும் பஞ்சமே இருக்காது.
256எம்பி சிஸ்டம் மெமரி, 512எம்பி ரேம் போன்ற தகவல்கள் சேகரிப்பு வசதியும் உள்ளது. இதன் தகவல்கள் சேகரிக்கும் மெமரி வசதியினை 32ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். லித்தியம்-அயான் 1,000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால், 220 மணி நேரம் ஸ்டான்-பை டைம் மற்றும் 7.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் பெறலாம்.
இந்த ஃப்ளை பிளாக்பேர்டு ஸ்மார்ட்போன் ரூ.11,000 ஒட்டிய விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications