Home
Mobile

Flipkart-ல் இந்த Realme 5G போனின் ஆர்ட்ர் அள்ளுது.. நினைச்சு பார்க்காத தள்ளுபடி விலையில் கொடுத்தா விடுவாங்களா!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது தனது 2023 ஆம் ஆண்டிற்கான இயர் எண்ட் சேலின் (Year End Sale 2023) ஒரு பகுதியாக டிசம்பர் 31 ஆம் தேதி வரை நடக்கும் வின்டர் ஃபெஸ்ட் (Winter Fest) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது.

வின்டர் ஃபெஸ்ட் விற்பனையின்கீழ் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகி, விற்பனையில் சக்கைபோடு போட்ட ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன் ஆனது பெரும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? அதன் மீது எவ்வளவு தள்ளுப்படு கிடைக்கிறது? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

Flipkart-ல் Realme 11X 5G போனின் மீது நினைச்சு பார்க்காத தள்ளுபடி!

என்ன மாடல்? ரியல்மி 11எக்ஸ் 5ஜி (Realme 11x 5G) ஸ்மார்ட்போன் மீதுதான் இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் உள்ள தகவல்களின்படி ரியல்மி 11எக்ஸ் 5ஜி-யின் ஹை-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.3000 மற்றும் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.2000 தள்ளுபடி கிடைக்கும்.

இந்த தள்ளுபடி ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீதான கேஷ்பேக் / கூப்பன் சலுகைகளை (Cashback / Coupon Offers) உள்ளடக்கியது என்பதையும் பிளிப்கார்ட் வலைத்தளம் குறிப்பிட்டுள்ளது. அதாவது ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Flipkart-ல் Realme 11X 5G போனின் மீது நினைச்சு பார்க்காத தள்ளுபடி!

பிளிப்கார்ட்டின் கேஷ்பேக் / கூப்பன் சலுகையை பயன்படுத்தினால் இதை ரூ.14,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க முடியும். இதேபோல ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது ரூ.3000 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர்த்து பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்ட்டை பயன்படுத்தினால் 5% கேஷ்பேக்கும் கிடைக்கும்.

ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இது ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான அம்சங்களை அப்படியே கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எப்எச்டி பிளஸ் சாம்சங் அமோஎல்இடி டிஸ்பிளேவையே கொண்டுள்ளது.

Flipkart-ல் Realme 11X 5G போனின் மீது நினைச்சு பார்க்காத தள்ளுபடி!

மேலும் இது 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8ஜிபி வரையிலான ரேம்-ஐ வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 16ஜிபி வரையிலாக ரேம்-ஐ விரிவாக்க கூடிய டைனமிக் ரேம் அம்சமும் உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ரியல்மி யுஐ 4.0 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி 11 5ஜி மற்றும் ரியல்மி 11எக்ஸ் 5ஜி-க்கு இடையேயான வேறுபாடுகள் கேமரா செட்டப்பிலும், பேட்டரி டிபார்ட்மென்ட்டிலும்உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனிலும் கூட டூயல் ரியர் கேமரா செட்டப்பே உள்ளது. ஆனால் அதில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் கூட ரியல்மி 11 5ஜி-ஐ போலவே 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இது 67W SuperVOOC சார்ஜிங்கிற்கு பதிலாக 33W SUPERVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. அதாவது ரியல்மி 11எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வெண்ணிலா மாடலின் டோன்டு-டவுன் வேரியண்ட் ஆக (அதாவது சற்றே அம்சங்கள் குறைக்கப்பட்ட மாடலாக) வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Year End Sale Realme 11X 5G Smartphone Available to Buy under Offer Price Till Dec 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X