Home
Mobile

வெறும் ரூ.12,999 போதும்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை வரும் டிசம்பர் 16-ம் தேதி வரை மட்டுமே நடைபெறும்.

மேலும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G54 5G) போனுக்கு 22 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும்.

வெறும் ரூ.12,999 போதும்.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

எனவே ரூ.12,999 இருந்தால் போதும் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி போனை வாங்க முடியும். மேலும் இப்போது மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஜி54 5ஜி அம்சங்கள் (MOTOROLA g54 5G Specifications): 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் .மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் ( dynamic refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பான டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

வெறும் ரூ.12,999 போதும்.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 7020 Processor) கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. பின்பு My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன்.

அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போனில் போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

வெறும் ரூ.12,999 போதும்.. ஆஃபரில் MOTOROLA போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும். மிட்நைட் ப்ளூ (Midnight Blue), மிண்ட் க்ரீன் (Mint Green) மற்றும் பியர் ப்ளூ (Pear Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
flipkart year end sale: Massive Discount on Motorola G54 5G with 8GB RAM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X