Home
Mobile

விஸ்வரூப விற்பனை.. pOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. 12GB ரேம்.. ஆஃபரில் மோட்டோரோலா 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இயர் எண்ட் சேல் (Year End Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்று நிறைவு பெறுகிறது. எனவே கம்மி விலையில் ஸ்மார்ட்போன்களை வாங்க நினைக்கும் பயனர்கள் இன்று பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்துவது நல்லது.

அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 17 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.18,999 விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது.

pOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. ஆஃபரில் MOTOROLA  5ஜி போன்.. எந்த மாடல்?

எனவே மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போனை மிகவும் குறைந்த விலையில் வாங்க முடியும். மேலும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஜி84 5ஜி அம்சங்கள் (Motorola g84 5G specifications): OIS ஆதரவு கொண்ட 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

குறிப்பாக மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 695 8என்எம் (Octa Core Snapdragon 695 8nm)சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் அட்ரினோ 691எல் ஜிபியு ஆதரவும் (Adreno 619L GPU) இந்த போனில் உள்ளது.

கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் உள்ளிட்ட ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது மோட்டோரோலா ஜி84 5ஜி போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 10-பிட் பிஒல்இடி ( 10-bit pOLED) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி போன். மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ் ( 1300 nits brightness), 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (360Hz touch sampling rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தை வழங்கும்.

pOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. ஆஃபரில் MOTOROLA  5ஜி போன்.. எந்த மாடல்?

தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி54 (IP54) சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் எனப் பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோரோலா ஜி84 5ஜி ஸ்மார்ட்போன் 5ஜி (14 5ஜி பேண்ட்ஸ்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனின் எடை 168.3 கிராம் ஆகும். அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
flipkart year end sale: 17 percent discount on Motorola G84 5G smartphone : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X