காதலர் தின சேல்.. மட்ட ரேட் ரூ.12,349 க்கு Moto 5ஜி போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் காதலர் தின விற்பனை 2026 (Flipkart Valentines Day Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. இதில் மோட்டோ ஜி35 5ஜி (Moto g35 5G) ஸ்மார்ட்போன் மலிவான விலைக்கு கிடைக்கிறது. இந்த மோட்டோ போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 16 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடி போக ரூ.12,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், ரூ.600 தள்ளுபடியானது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.12,349 இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

மோட்டோ ஜி35 5ஜி அம்சங்கள் (Moto g35 5G Specifications): பட்ஜெட் விலை மாடலாக இருப்பதால், ஆக்டா கோர் யுனிசோக் டி760 6என்எம் (Octa Core UNISOC T760 6nm) சிப்செட்டை இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்சி4 ஜிபியு (Mali G57 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், 1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. ஆகவே, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கும். 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து உள்ளது. ரூ.12,000 பட்ஜெட்டிலும் டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பை கொடுத்து உள்ளது. 6.72 இன்ச் (2400 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது. எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் கிடைத்து இருக்கிறது.
இந்த மெமரி போக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) பயன்படுத்தி கொள்ளலாம். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமராவும் கொடுக்கப்பட்டு உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sesnor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) மட்டுமல்லாமல், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 3.5 எம்எம் ஆடியோ ஜாக்கை இந்த மோட்டோ ஜி35 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. IP52 ரேட்டிங்குடன் வாட்டர் ரெப்பலன்ட் கிடைக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 7.79 எம்எம் தடிமன் கொடுத்துள்ளது. 185 கிராம் எடை கிடைக்கிறது. லீப் கிரீன் (Leaf Green), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் குவாவா ரெட் (Guava Red) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. வீகன் லெதர் பேனல் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








