லவ்வர்ஸ் டே ஆஃபர்.. வெறும் ரூ.9,499 க்கு Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் வேலன்டைன்ஸ் டே சேல் 2026 (Flipkart Valentine Day Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் தள்ளுபடி போக ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி (Samsung Galaxy F06 5G) ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
28 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.9,999 விலையில் இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், ரூ.500 தள்ளுபடியானது தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, ரூ.9,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கிரெடிட் கார்டு வழியாக இஎம்ஐ ஆப்ஷனில் வாங்கினாலும் தள்ளுபடி கொடுக்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy F06 5G Specifications): இந்த விலைக்கு ஏற்ப டிஸ்பிளே கிடைத்துள்ளது. 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) பிஎல்எஸ் எல்சிடி (PLS LCD) டிஸ்பிளேவை இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 90 Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது.
மேலும், 16 மில்லியன் கலர் டெப்த் மற்றும் ரவுண்டெட் கார்னர்களை கொடுத்துள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட்டை கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஒன் யுஐ 7 (One UI 7) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்கும்.
4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. மீடியம் அவுட்புட் கொடுக்கும்படி ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமராவை கொடுக்கும் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது.
இந்த கேமராவுக்கு 10X டிஜிட்டல் ஜூமிங் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொடுத்து உள்ளது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து உள்ளது. இதில் வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளை எடுத்து கொள்ளலாம். ஆனால், ஆட்டோ போகஸ் கிடைக்காது. HD ரெசொலூஷனில் ஸ்லோவ் மோஷன் வீடியோ கிடைக்கும்.
4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டே ரூ.9,499 விலைக்கு கிடைக்கிறது.
25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை இந்த சாம்சங் கேலக்ஸி எப்06 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8 எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடை கிடைக்கிறது. சைடு பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side Facing Fingerprint Scanner) உள்ளது. பஹாமா ப்ளூ (Bahama Blue) மற்றும் லிட் வயலட் (Lit Violet) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








