Home
Mobile

2025 மார்ச் வரை எந்த போனும் வாங்கிடாதீங்க.. பட்ஜெட்டில் 2 சிங்க குட்டிகளை இறக்கும் Nothing நிறுவனம்!

ஒருவழியாக நத்திங் (Nothing) நிறுவனம் அறிவித்த மார்ச் 4 வெளியீட்டு நிகழ்வில் (March 4 Launch Event) என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்கிற தகவல் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அறிமுகத்திற்கு சுமார் ஒரு மாத காலம் இருக்கும் முன்பே வெறுமனே வெளியீட்டு தேதியை மட்டும் உறுதி செய்வதும், அந்நாளில் என்ன ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்கிற விவரங்களை க்ரிப்டிக் பாணியிலான டீசர்களை வெளியிடுவதும் நத்திங் நிறுவனத்திற்கு புதிதல்ல.

இப்படி செய்வதன் மூலம் ரசிகர்கள் மத்தியில்.. புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்து ஆர்வத்தை அதிகரிக்க முடியும் என்று நத்திங் நம்புகிறது. அப்படித்தான் 2025 ஆம் ஆண்டின் அதன் முதல் வெளியீட்டு நிகழ்வின் வழியாகவும் பல ஆர்வங்களை கிளப்பி உள்ளது. மார்ச் 4 இல் ஒரு புதிய தயாரிப்பு அறிமுகமாகும் என்று டீஸ் செய்து, அது என்னவாக இருக்கும் என்கிற கேள்விகளையும், யூகங்களையும் கிளப்பி விட்டது.

மார்ச் 4 இல் 2 புதிய போன்களை இறக்கும் Nothing நிறுவனம்!

தற்போது பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் வழியாக அந்தகேள்விக்கு விடை கிடைத்துள்ளது, பிளிப்கார்ட்டின் புதிய டீஸர், மார்ச் 4 ஆம் தேதியன்று நத்திங் போன் 3ஏ சீரீஸ் (Nothing Phone 3a Series) அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஆரம்பத்தில், இது ஃபிளாக்ஷிப் மாடலான நத்திங் போன் 3 ஆக இருக்குமா அல்லது பட்ஜெட் விலையிலான நத்திங் போன் 3ஏ ஆக இருக்குமா என்கிற குழப்பம் நிலவியது

தற்போது, அறிமுகமாவது நத்திங் போன் 3ஏ சீரிஸ் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த டீசரில் நத்திங் போன் 3ஏ சீரீஸின் ரியர் டிஸைனை மேலோட்டமாக பார்க்க முடிகிறது, ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட்டை சுற்றி வளைக்கும் கிளிஃப் எல்இடி (Glyph LED) லைட்ளை காண முடிகிறது. கேமரா செட்டப் ஆனது கிடைமட்டமாக பேக் செய்யபட்டுள்ளது. ஆனால் இந்த முறை, கேமரா செட்டப்பில் 3 லென்ஸ்கள் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

நத்திங் போன் 3ஏ சீரீஸின் (Nothing Phone 3a Series) சீரீஸின் கீழ் 2 மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகள் நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a), நத்திங் போன் 3ஏ ப்ரோ (Nothing Phone 3a Pro). அதாவது இவ்விரு ஸ்மார்ட்போன்களும் அறிமுகமான பின்னரே நத்திங் போன் 3 அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

நத்திங் போன் 3ஏ மற்றும் நத்திங் போன் 3ஏ ப்ரோ ஆகிய 2 மாடல்களின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன. ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (Android Headlines) வழியாக கிடைத்த தகவலின்படி நத்திங் போன் 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி.

கேமராக்களை பொறுத்தவரை இது கிடைமட்டமாக பொருத்தப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Horizontal Triple camera setup) கொண்டிருக்கலாம். இதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவைகள் பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில், இது 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது எப் எச்டி பிளஸ் ரெசல்யூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.8-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 7s Gen 3 chip) மூலம் இயக்கப்படலாம்.

இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நத்திங் ஓஎஸ் 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உடன் வரலாம். கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை இது [பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Teaser Confirmed Nothing Phone 3a Series Launch on March 4 What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X