Home
Mobile

ஆல் ஏரியா ஐயா கில்லிடா.. iPhone 17 முதல் iPhone 15 வரை.. எல்லா மாடல்கள் மீதும் ரூ.25000 வரை Flipkart தள்ளுபடி!

அமேசான் இந்தியாவை தொடர்ந்து பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமும் அதன் 2026 ஆம் ஆண்டிற்கான சம்மர் சேல்-ஐ (Summer Sale) அறிவித்துள்ளது. அமேசானின் கிரேட் சம்மர் சேல்-ஐ போலவே இதுவும் மே 9 ஆம் தேதி அன்று தான் தொடங்க உள்ளது. ஆனால் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே பிளிப்கார்ட் பிளஸ் மெம்பர்களுக்கான முன்கூட்டிய அணுகல் திறக்கப்படும்.

அதிர விடும் ஐபோன் ஆபர்கள்: பொதுவாகவே பிளிப்கார்ட் விற்பனையில் ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஐபோன்கள் மீதான ஆபர் (iPhone Offers) அமோகமாக இருக்கும். இந்த முறை இன்னும் "அதிரடியாக" இருக்கும் என்பது போல் தெரிகிறது. ஏனென்றால் மே 7 தொடங்கும் பிளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 17 ஆனது முன்னெப்போதும் இல்லாத மிக குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

iPhone 17 முதல் iPhone 15 வரை.. ரூ.25000 வரை Flipkart தள்ளுபடி!

இதோடு ஐபோன் 17 ப்ரோ (iPhone 17 Pro) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) ஆகிய மாடல்கள் மீதும் ஆபர் இருக்குமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அதிக செலவின்றி கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16 (iPhone 16) மாடலை வாங்க விரும்புபவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கும்.

என்னென்ன ஐபோன் மாடல் என்ன ஆபர் விலைக்கு வாங்க கிடைக்கும்? நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 17 மாடல் கடந்த செப்டம்பர் 2025-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் 256ஜிபி ஆப்ஷனின் விலை பிளிப்கார்ட்டில் ரூ.82,900 என்ற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் வரவிருக்கும் விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் இதை ரூ.71,999 என்ற ஆபர் விலையில் வாங்கலாம். இந்த விலையானது வங்கி தள்ளுபடிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வாய்ப்புள்ளது.

ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் ஆகியவை பிளிப்கார்ட் தளத்தில் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,49,900 என்கிற விலையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பிளிப்கார்ட் சம்மர் விற்பனையின் போது, ​​இந்த இரண்டு மாடல்களும் முறையே ரூ.1,09,900 மற்றும் ரூ.1,24,900 என்ற குறைந்த விலையில் வாங்கலாம். குறிப்பிடப்பட்டுள்ள தொகை, அந்தந்த மாடல்களின் 256ஜிபி ஆப்ஷன்களின் விலையாகும்; அதிக ஸ்டோரேஜ் கொண்ட மாடல்களின் விலைகள் அதற்கேற்ப சரிசெய்யப்படும் (குறைக்கப்படும்).

இதேபோல செப்டம்பர் மாதம் ஐபோன் 17 சீரீஸ் உடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் ஏர் மாடல் ஆனது ரூ.95,900 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில், ஐபோன் ஏர் அடிப்படை மாடலின் வழக்கமான விற்பனை விலை ரூ.1,19,900 ஆகும். மிகவும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 17இ, அதன் அறிமுக விலையான ரூ.64,900 இல் இருந்து குறைந்து ரூ.60,900 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய (முந்தைய ஜெனெரஷன்) ஐபோன் மாடல்களிலும் சலுகைகள் கிடைக்கும். ஐபோன் 16 அதன் தற்போதைய பட்டியல் விலையான ரூ.69,900 இல் இருந்து குறைந்து, ரூ.58,900 க்கு வாங்க கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஐபோன் 16 பிளஸ் ரூ.73,900 க்கு வாங்க கிடைக்கும்.

ஆப்பிள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்ட ஐபோன் 15 மாடல் ஆனது ரூ.51,900 க்கு வாங்க கிடைக்கும் என்றும், கடைசியாக ஐபோன் 16இ மாடலின் 128ஜிபி ஆப்ஷன், அதன் அறிமுக விலை ஆன ரூ.59,900 க்கு பதிலாக ரூ.55,900 என்குற ஆபர் விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக ரூ.50000 முதல் ரூ.100000 க்கு அருகில் வரையிலான ஆபர் விலையில் பல ஐபோன்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

Best Mobiles in India

English summary
Flipkart Summer Sale Starts May 7 Offers From iPhone 15 to iPhone 17 All Models gets Discount
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X