கொஞ்சம் பழசு தான்.. அதுக்காக இவ்ளோ பெரிய டிஸ்கவுண்ட்-ஆ.. Flipkart -ல் இந்த iPhone மாடலின் ஆர்டர் தெறிக்குது!
புதிய ஐபோன் மாடல்கள் அறிமுகமானதும் பழைய ஐபோன் மாடல்களின் விலைகள் குறைக்கப்படுவது சகஜம் தான். ஆனால் ஐபோன் 16 சீரீஸ் அறிமுகம் செய்யப்பட்டு பல மாதங்கள் கழித்து, சற்றே பழைய ஒரு ஐபோன் மாடல் மீது அபாரமான தள்ளுபடி அறிவிக்கபட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) வலைதளத்தில் கிடைக்கும் இந்த டிஸ்கவுண்ட் குறித்த விவரிங்கள் இதோ:
என்ன மாடல்? பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது நல்ல டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுவது ஐபோன் 13 (iPhone 13) மாடலாகும். 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் (128GB Storage) உடன் வரும் ஐபோன் 13 மாடல் தற்போது ரூ.40,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது அசல் விலையில் இருந்து 17% தள்ளுபடியை பெற்றுள்ளது.

சுவாரசியமாக இந்த டிஸ்கவுண்ட் ஐபோன் 13 மாடலின் அனைத்து கலர் ஆப்ஷன்களின் மீது கிடைக்கிறது. அதாவது பிளாக் (Black), பிங்க் (Pink), ப்ளூ (Blue), க்ரீன் (Green), ஒயிட் (White) மற்றும் ப்ராடெக்ட் ரெட் (Product Red) ஆகிய எல்லா கலர் ஆப்ஷன்களிலும் இந்த சலுகை கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் ஐபோன் 13 மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால், அதன் மீதும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
பிளாக் மற்றும் ப்ளூ கலர் ஆப்ஷன், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 13 மாடல் தற்போது ரூ.59,900 க்கு பதிலாக 18% தள்ளுபடியை பெற்று ரூ.48,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஆனால் ஐபோன் 13 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது எந்த டிஸ்கவுண்டும் கிடைக்கவில்லை. அது இன்னமும் ரூ.79,900 க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.
ஐபோன் 16 (iPhone 16) அறிமுகமாகி விட்ட நிலையில், பழைய ஐபோன் 13 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கு 2 காரணங்களை முன்வைத்து ஐபோன் 13 மாடலை ஏன் இப்போதும் நம்பி வாங்கலாம் என்பதை எங்களால் கூற முடியும். முதல் காரணம் - இது ஐபோன் 14 மாடலை உள்ளது. குறிப்பாக பெர்ஃபார்மென்ஸில், ஒப்பீட்டளவில் இதற்கும் ஐபோன் 14 மாடலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஏனென்றால் ஐபோன் 14 மாடலில் உள்ள ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப் (A15 Bionic Chip) தான் ஐபோன் 13 மாடலிலும் உள்ளது. இது தவிர்த்து ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகிய இரண்டுமே டூயல் ரியர் கேமரா செட்டப்பை தான் கொண்டுள்ளன. ஆப்பிள் நிறுவனமானது 6 வருடங்கள் பழைய ஐபோன் மாடலுக்கு கூட அப்டேட்களை வெளியிடுவதால், ஐபோன் 13 மாடலுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்டில் எந்த சிக்கலும் இருக்காது.
இரண்டாவது காரணம் புதிய ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல்கள் மட்டுமின்றி, பழைய ப்ரோ மாடல்களுக்காக அதிகம் செலவழிக்க விரும்பாதவர்கள்.. கூடவே ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் ஐபோன் மாடலை தேடுபவர்கள். ஆபர் விலையில் கிடைக்கும் ஐபோன் 13 நம்பி வாங்கலாம். இன்னமும் இது ஒரு நல்ல தேர்வாகவே உள்ளது. பட்ஜெட்வாசிகள் ஐபோன் 13 மாடலில் சந்திக்கும் ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால், ஐபோன் 13-ன் ரீடெயில் பாக்ஸில் சார்ஜர் இணைக்கப்படாது. எனவே கூடுதல் செலவு செய்து நீங்கள் ஒரு சார்ஜரை வாங்க வேண்டியிருக்கும்.
ஒருவேளை நீங்கள் ஐபோன் 14 (iPhone 14) மாடலை வாங்க விரும்பினால், தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.50,999 முதல் வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐபோன் 15 (iPhone 15) மாடல் ஆனது ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஐபோன் 16 (iPhone 16) மாடல் ஆனது ரூ.79,900 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








