வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!

|

Oppo A33 ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தீபாவளி தின விற்பனையில் வெறும் ரூ.3,597-க்கு பைபேக் உத்தரவாதத்துடன் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை

பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை

அக்டோபர் 29 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை தினத்தில் ஸ்மார்ட்போன்களுக்கு கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் வழங்கப்படும். அதோடு சில வங்கி கார்டுகளுக்கும் தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்

ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன்

பிளிப்கார்ட் பிக் சேவிங் தினம், பிக் பில்லியன் தின விற்பனையை தவறவிட்ட வாடிக்கையாளர்களுக்கு பிளிப்கார்ட் தீபாவளி தின அறிவிப்பு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விற்பனை தினத்தில் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான ஒப்பந்தம் கிடைக்கிறது.

ரூ.3,597-க்கு எப்படி வாங்குவது

ரூ.3,597-க்கு எப்படி வாங்குவது

ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் விற்பனை தினத்தில் ரூ.3,597-க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.11,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.11,990 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ரூ.3,597-க்கு எப்படி வாங்குவது என்ற வழிமுறைகளை பார்க்கலாம்.

ப்ளே ஸ்டோரில் இந்த 21 செயலிகளை எக்காரணம் கொண்டும் டவுன்லோட் செய்யாதீர்கள்!

BUYBACK உத்தரவாதம்

BUYBACK உத்தரவாதம்

ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் BUYBACK (திரும்ப வாங்கப்படும்) என்ற உத்தரவாதத்துடன் பிளிப்கார்ட்டில் வருகிறது. பைபேக் உத்தரவாதத்தின் கீழ் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை சொந்தமாக்கிக் கொள்ள முடியும். இந்த கால அவகாசம் முடிந்தவுடன் ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனை திருப்பித் தர வேண்டும். அதே சமயத்தில் புதிய ஒப்போ ஏ33 வாங்க விரும்பினால் தள்ளுபடி வழங்கப்படும். அதே ஒப்போ ஏ33 ஸ்மார்ட்போனை முழுமையாக சொந்தமாக்க மீதமுள்ள முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்.

ஒப்போ ஏ 33: அம்சங்கள்

ஒப்போ ஏ 33: அம்சங்கள்

ஒப்போ ஏ 33 சில மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட பட்ஜெட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி ஆகும். ஒப்போ ஏ 33 6.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. டிஸ்ப்ளேயில் 8 மெகாபிக்சல் பஞ்ச்-ஹோல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில், மூன்று கேமரா அமைப்பு இருக்கிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா, 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாவது கேமரா இருக்கிறது.

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு

ஒப்போ ஏ33 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் மூலம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 256 ஜிபி வரை சேமிப்பை விரிவாக்கலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான கலர்ஓஎஸ் 7.2 இல் இயங்குகிறது. ஒப்போ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இணைப்பு ஆதரவுகளாக யூ.எஸ்.பி-சி போர்ட், பின்புற கைரேகை சென்சார் மற்றும் ப்ளூடூத் 5.0 ஆகியவை உள்ளன.

source: indiatoday.in

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Sell Oppo A33 Smartphone For Rs.3,597 under the Buyback Guarantee

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X