ஆளுக்கு 1 தூக்குங்க.. பழைய விலைக்கு இறங்கிய 5 Motorola போன்கள்.. விலை உயர்விற்கு டாட்டா காட்டிய Flipkart!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது, சாசா லேலே (Sasa Lele) என்கிற சிறப்பு விற்பனை வருகிற மே 9 ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அறிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்த விற்பனையின் போது, மொத்தம் 5 மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது?
1. மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion)
2. மோட்டோரோலா எட்ஜ் 70 பியூஷன் (Motorola Edge 70 Fusion)
3. மோட்டோரோலா ஜி57 பவர் (Motorola G57 Power)
4. மோட்டோரோலா ஜி96 (Motorola G96)
5. மோட்டோரோலா ஜி67 பவர் (Motorola G67 Power)

மேற்கண்ட ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? மேற்கண்ட 5 மாடல்களில் மிகவும் நேரடியான சலுகை - மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் மீது தான் கிடைக்கிறது. இது ரூ.19,999 வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை - அதன் அறிமுக விலை மற்றும் தற்போதைய விற்பனை விலையை விட ரூ.3,000 குறைவாகும்.
மோட்டோரோலா எட்ஜ் 70 ப்யூஷன் ஸ்மார்ட்போனானது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.26,999 வரை உயர்ந்திருந்த நிலையில், தற்போது அதன் அசல் அறிமுக விலைக்கு திரும்பியுள்ளது. எனவே, இது "டெக்னீக்கலி" அறிமுக விலையிலிருந்து தள்ளுபடி இல்லை என்றாலும், இது ஒரு நல்ல விலை குறைப்பாகும்.
மோட்டோரோலா ஜி57 பவர் ஸ்மார்ட்போனின் மீதான தள்ளுபடி - சற்று சிக்கலானது என்றே கூறலாம். இது ரூ.12,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டு, ரூ.17,999 வரை விலை உயர்ந்தது. இப்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையின் போது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய விலையை விட சிறந்தது, ஆனாலும் அதன் அசல் விலையை விட ரூ.3,000 அதிகம்.
அடுத்ததாக மோட்டோரோலா ஜி96 ஸ்மார்ட்போன் உள்ளது. இது ரூ.17,999 க்கு அறிமுகமானது. இப்போது ரூ.20,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் விற்பனையின் போது அறிமுக விலையான ரூ.17,999 க்கு திரும்பும். இதேபோல மோட்டோரோலா ஜி67 பவர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு அறிமுகமானது. இப்போது ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பிளிப்கார்ட் விற்பனையின் போது அறிமுக விலையான ரூ.16,499 க்கு வாங்க கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
OPINION - எந்த ஆபர் மதிப்புமிக்கதாக இருக்கும்? ரூ.19,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 60 ஃபியூஷன் தான் இந்த பட்டியலில் தனித்து நிற்கிறது. இது ஒரு திடமான கேமரா செட்டப், நேர்த்தியான சாஃப்ட்வேர் மற்றும் நல்ல டிஸ்பிளே குவாலிட்டி கொண்ட ஒரு திறமையான மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனாகும்
இந்த விலையில், இது ஐக்யூ இஸட்11எக்ஸ் (iQOO Z11x) மற்றும் போக்கோ எம்8 (POCO M8) ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டும் கூட, இதே போன்ற விலை வரம்புகளில் வலுவான ஸ்மார்ட்போன்களாக உள்ளன
அடுத்ததாக நீங்கள் ஏற்கனவே வாங்க நினைத்திருந்தால், ரூ.24,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற உள்ள மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷனும் ஒரு நியாயமான தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் - இதே விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, விலை உயர்ந்து, இப்போது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டது. மோட்டோரோலாவின் பலம் என்பது பொதுவாக அதன் செயல்திறனை விட, டிஸ்பிளே மற்றும் கேமராவின் சீரான தன்மையே ஆகும். அதில் எட்ஜ் 70 பியூஷன் குறை வைக்காது.


Click it and Unblock the Notifications