அள்ளி தரும் பிளிப்கார்ட்.. ரூ.11,999க்கு 7000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
இன்று பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) எனும் சிறப்பு விற்பனை தொடங்கி உள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் சியோமி, விவோ, மோட்டோ, ஒப்போ, போக்கோ நிறுவனங்களின் போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் எதிர்பார்த்த போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G ) போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது சில வாரங்களுக்கு முன்பு தான் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி மாடல் ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த போனுக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்க முடியும்.

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) வசதியுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 (Android 15) சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது போக்கோ எம்7 பிளஸ் 5ஜி. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும்.
குறிப்பாக 7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி வெளிவந்துள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33Wஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








