தட்டி தூக்குறாங்க.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. குறைந்த விலையில் MOTOROLA போன்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மோட்டோரோலா போன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதாவது பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான மோட்டோரோலா போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G54 5G) ஸ்மார்ட்போனை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா போன் முன்பு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் கொண்ட மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999-க்கு வாங்க கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்போது மோட்டோரோலா ஜி54 5ஜி போனின் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.
6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் ( dynamic refresh rate), 560 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், பாண்டா கிளாஷ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 6என்எம் பிராசஸர் கொண்டுள்ளது இந்த அசத்தலான மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. அதேபோல் My UX சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த மோட்டோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30 வாட்ஸ் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேபோல் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டோரோலா ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன். மேலும் இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 192 கிராம் ஆகும்.
மிட்நைட் ப்ளூ (Midnight Blue), மிண்ட் க்ரீன் (Mint Green) மற்றும் பியர் ப்ளூ (Pear Blue) நிறங்களில் இந்த மோட்டோ ஜி54 5ஜி போன் வாங்கக் கிடைக்கும். குறிப்பாக இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








