இறங்கி அடித்த பிளிப்கார்ட்.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்7 5ஜி (POCO X7 5G) ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போக்கோ போன் வெளிவந்தது. இப்போது போக்கோ 5ஜி போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் போக்கோ எக்ஸ்7 5ஜி போனுக்கு 36 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

போக்கோ எக்ஸ்7 5ஜி அம்சங்கள் (Poco X7 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா (4nm Octa Core MediaTek Dimensity 7300 Ultra)சிப்செட் உடன் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி615 ஜிபியு (Mali G615 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் போக்கோ எக்ஸ்7 5ஜி போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் இந்த போக்கோ போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.
6.67 இன்ச் அமோலெட் (AMOLED) வசதியுடன் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712× 1220 பிக்சல்கள், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட்உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் போக்கோ எக்ஸ்7 5ஜி வெளியாகி உள்ளது. போக்கோ எல்லோ (POCO Yellow), காஸ்மிக் சில்வர் (Cosmic Silver) அல்லது கிளாசியர் கிரீன் (Glacier Green) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.
5500mAh பேட்டரி உடன் போக்கோ எக்ஸ்7 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








