அருமையான வாய்ப்பு.! ஐபோன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு & கேஷ்பேக்.!

|

பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட், வருகிற ஜனவரி 15-ஆம் தேதி வரையிலாக அதன் ஆப்பிள் வீக் சலுகைகளை வழங்குமென அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன்கள், ஐபாட்கள், மேக்புக்ஸ், ஆப்பிள் வாட்ச் போன்ற பல ஆப்பிள் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அருமையான வாய்ப்பு.! ஐபோன்கள் மீது அதிரடி விலைகுறைப்பு & கேஷ்பேக்.!

ஐசிஐசிஐ கிரெடிட் அட்டை வழியாக இஎம்ஐ பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கும் கேஷ்பேக் சலுகை கிடைக்குமென்பதும், உடன் ஆப்பிள் ஐபோன் 8, ஆப்பிள் மேக்புக் ஏர், ஆப்பிள் வாட்ச், ஐபாட்கள் ஆகிய அனைத்துமே ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான சலுகையின் ஒரு பகுதியாக கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மீதான சலுகை

ஆப்பிள் ஐபோன் எக்ஸ் மீதான சலுகை

நிறுவனத்தின் புத்தம் புதிய கருவியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் சாதனத்தின் மீது ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் எந்த விதமான விலைக்குறைப்பும் இல்லை. ஆனால், ஐபோன் எக்ஸ் ஆனது கேஷ்பேக் சலுகைக்கு திறந்து விடப்பட்டுள்ளது, விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் அதை பயன்டுத்திக்கொள்ளலாம்.

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மீதான சலுகை

ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மீதான சலுகை

ஐபோன் 8-ன் 64 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.54,999/-க்கு தற்போது ப்ளிப்கார்டில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலையானது ரூ.64,000/- என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பெரிய மாறுபாடான ஆப்பிள் ஐபோன் 8 பிளஸ் ஆனது ரூ.66,499/-க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.73,000/- ஆகும். ஐசிஐசிஐ கிரெடிட் அட்டை கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.8000/- என்கிற கேஷ்பேக் கிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மீதான சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் மீதான சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ்-ன் 32 ஜிபி சேமிப்பு மாதிரியானது இப்போது ரூ.56,999/-க்கு வாங்க கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.5000/- கேஷ்பேக் வாய்ப்பும் கிடைக்கும். ஆக இந்த விற்பனையில் ஒருவர் ஐபோன் 7 ப்ளஸ்-ஐ ரூ.51,999/-க்கு வாங்க முடியும்.

ரூ.18,000/- எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு

ரூ.18,000/- எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு

மறுகையில், இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ள ஐபோன் 7 பிளஸ் ஆனதிற்கு ரூ.18,000/- அளவிலான எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உடன் ஆப்பிள் ஐபோன் 7-ன் 32 ஜிபி சேமிப்பு மாதிரியானது ரூ.42,999/-க்கு வாங்க கிடைக்கும் இக்கருவிக்கு ரூ.5000/- கேஷ்பேக் வாய்ப்பும் கிடைக்கும். இதன் அர்த்தம் இந்த ஆப்பிள் வீக் சிறப்பு விற்பனையில் ஒருவர் ஐபோன் 7-ஐ ரூ.37,999/-க்கு வாங்க முடியும்.

ஆப்பிள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6 மீதான சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6 மீதான சலுகைகள்

ஆப்பிள் ஐபோன் 6 ஆனது ரூ.25,499/-க்கு வாங்க கிடைக்கும். ஐபோன் 6 பிளஸ் ஆனது ரூ.37,999/-ல் இருந்து வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 6எஸ் கருவியை பொறுத்தமட்டில் ரூ.34,999/-க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இது 'விரைவில் வரும்' என பட்டியலிடப்பட்டுள்ளது.

ஐபோன் எஸ்இ மீதான சலுகைகள்

ஐபோன் எஸ்இ மீதான சலுகைகள்

இறுதியாக, ஐபோன் எஸ்இ கருவியை பொறுத்தமட்டில் ரூ.20,000/-க்கும் குறைவான விலையில் அதாவது ரூ.18,999/-க்கு வாங்க கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2500/- கேஷ்பேக் சலுகையும்ப்ளிபொதுவான வாடிக்கையாளர்களுக்கு ரூ.18,000/- என்கிற எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பும் இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும்.

சிறப்பு சலுகை

சிறப்பு சலுகை

ஐசிஐசிஐ வங்கி வடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளை பொறுத்தமட்டில், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் மீது ரூ.8,000/- கேஷ்பேக் வாய்ப்பு மற்றும் ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் வாங்குவோர்களுக்கு ரூ 5,000/- கேஷ்பேக் வாய்ப்பு மற்றும் ஐபோன் 6, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் மீதான ரூ.3,000/- கேஷ்பேக் வாய்ப்பு ஆகியவைகளை பெறலாம்.

ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் மேக்புக் மீது ரூ 8,000/- கேஷ்பேக் கிடைக்கும் உடன் ஆப்பிள் ஐபோன் எஸ்இ மீது ரூ.2,500/- கேஷ்பேக் மற்றும் ஆப்பிள் ஐபாட் மற்றும் ஆப்பிள் வாட்ச் மீது ரூ,2500/- கேஷ்பேக் கிடைக்கும். இந்த ப்ளிப்கார்ட் ஆப்பிள் வீக் விற்பனையானது நிஜமாகவே ஒரு சிறப்பு விற்பனைப்போல தெரிகிறதா.? இல்லையா.? என்ற உங்களின் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். மேலும் இதுபோன்ற சிறப்பு சலுகைகளை பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Flipkart’s Apple Week: Top deals on iPhone X, iPhone 7, MacBook Air and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X