Flipkart Realme Days Sale MAY 2021: ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Realme Days Sale MAY 2021 எனும் தலைப்பில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிளிப்கார்ட் வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலைகுறைப்பு சலுகையானது மே 10-ம் தேதி முதல் மே 14-ம் தேதி வரை இருக்கும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரியல்மி சாதனங்களை வாங்கினால் 10 சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இப்போது சலுகை விலையில்கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 20
பிளிப்கார்ட் வலைதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு விற்பனையில் ரியல்மி நார்சோ 20 ஸ்மார்ட்போனுக்கு 23 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.12,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.9,999-விலையில்
வாங்க முடியும்.

ரியல்மி சி25
சிறந்த மென்பொருள் வசதியுடன் ரியல்மி சி25 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி சி25 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.10,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.9,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி நார்சோ 30ஏ
ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.9,999-ஆக உள்ளது. ஆனால் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள தள்ளுபடி மூலம் ரூ.8,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி எக்ஸ்50 ப்ரோ
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி எக்ஸ்50 ப்ரோ மாடலுக்கு 40 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.41,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.24,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி எக்ஸ்7 5ஜி
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி எக்ஸ்7 5ஜி மாடலுக்கு 9 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.19,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி மாடலுக்கு 9 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.32,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி சி20
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் ரியல்மி சி20 மாடலுக்கு 15 சதவிகிதம் தள்ளுபடிவழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.7,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.6,799-விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி, ரியல்மி சி21, ரியல்மி நார்சோ 20 ப்ரோ, ரியல்மி 8 5ஜி, ரியல்மி சி15, ரியல்மி சி12, ரியல்மி 7 ப்ரோ போன்ற சாதனங்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications