Flipkart Qualcomm Snapdragon Days: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள்.!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் Flipkart Qualcomm Snapdragon Days எனும் தலைப்பில் ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு தான் இந்த சலுகைகள் உள்ளது. அதுவும் ஜூன் 27-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை இந்த சிறப்பு விற்பனை நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் சிப்செட் வசதிகளை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியை மக்கள் அதிகம் தேர்வு செய்கின்றனர் என்று தான் கூறவேண்டும். மேலும் இப்போது சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 9 பவர் (4ஜிபி ரேம்)
ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனுக்கு 25 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.13,999-ஆக இருந்தது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.10,499-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ்3 (6ஜிபி ரேம்)
4ஜிபி ரேம் கொண்ட போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.20,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 19 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஜி60 (6ஜிபி ரேம்)
மிகவும் அதிகம் எதிர்பார்த்த மோட்டோரோலா ஜி60 ஸ்மார்ட்போனுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 18 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 7ஐ (4ஜிபி ரேம்)
ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் மாடலுக்கு 13 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.14,999-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ஏ53
ஒப்போ ஏ53 ஸ்மார்ட்போன் மாடலுக்கு 27 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன99;படி இந்த சாதனத்தின் உண்மை விலை ரூ.17,990-ஆக உள்ளது, ஆனால் இந்த சிறப்பு விற்பனை மூலம் ரூ.12,990-ஆக உள்ளது.

ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி (8ஜிபி ரேம்)
8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி எக்ஸ்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.32,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.28,499-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 19 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 8 ப்ரோ
ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் ரூ.19,999-விலையில் வாங்க முடியும். அதாவது இந்த சாதனத்திற்கு 9 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ
போக்கோ எக்ஸ்3 ப்ரோ சாதனத்திற்கு 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.23,999-ஆக உள்ளது, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.

மோட்டோ ஜி40 ஃபியூஷன்
மோட்டோ ஜி40 ஃபியூஷன் சாதனத்திற்கு 17 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ.19,999-ஆக உள்ளது, ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையின் மூலம் ரூ.16,499-விலையில் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications