Flipkart POCO Days Sale June 2021:போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
போக்கோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. கூடிய விரைவில் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிளிப்கார்ட் தளத்தில் Flipkart POCO Days Sale June 2021 எனும் தலைப்பில் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜூன் 8-ம் தேதி வரை போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே
இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது விலைகுறைக்கப்பட்ட போக்கோ
ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

போக்கோ எம்3
போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு 19 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய
விலை ரூ.12,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.10,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக
சிறந்த தொழில்நுட்ப வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எக்ஸ்3
போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்திற்கு 27 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு6000எம்ஏஎச் பேட்டரி உட்பட பல்வேற சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் மாடல்.

போக்கோ எம்2 ப்ரோ
போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 5000எம்ஏஎச் பேட்டரி,ஸ்னாப்டிராகன் 720 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் இந்த ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த சாதனத்திற்கு 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.23,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உட்பட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

போக்கோ எம்2
போக்கோ எம்2 ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது,தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.9,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சாதனத்திற்கு 20 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீடியாடெக் ஹீலியே ஜி80 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த சாதனம்.

போக்கோ சி3
போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.9,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.7,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 25 சதவிகிதம் இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5000 எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது போக்கோ சி3.

போக்கோ எகஸ்2 (Atlantis Blue, 64 GB) (6 GB RAM)
போக்கோ எகஸ்2 (Atlantis Blue, 64 GB) (6 GB RAM) ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.18,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக 64எம்பி ரியர் கேமரா உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications