ரூ.10,999/-க்கு டூயல் கேம் உடன் ப்ளிப்கார்ட்டின் முதல் ஸ்மார்ட்போன்.!
இரண்டு சேமிப்பு மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி - 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள் சேமிப்பு - முறையே ரூ.10,999/- மற்றும் ரூ.12,999.!
ப்ளிப்கார்டின் சொந்த நிறுவனமான பில்லியன் பிராண்ட் அதன் முதல் ஸ்மார்ட்போன் ஆன பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் கருவியை இன்று (புதனன்று) 12 மணியளவில் விற்பனைக்கு திறந்துவிடுகிறது.

இரண்டு சேமிப்பு மாறுபாடுகளில் கிடைக்கும் இக்கருவி - 3 ஜிபி ரேம் + 32 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி உள் சேமிப்பு - முறையே ரூ.10,999/- மற்றும் ரூ.12,999/- என்ற சூப்பர் பட்ஜெட் விலை நிர்ணயத்தை பெற்றுள்ளன. கூடுதலாக, இந்த விற்பனையில் சில கவர்ச்சிகரமான சலுகைகளையும் ப்ளிப்கார்ட் வழங்குகிறது

டூயல் பின்புற கேமரா
அறிமுகமாகியுள்ள புதிய பில்லியன் கேப்ட்சர்+ கருவியின் டூயல் பின்புற கேமரா அமைப்பானது ட்ரோன்எக்ஸ் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் மேடையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதும், வரம்பற்ற இலவச க்ளவுட் சேமிப்புடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேஷ்பேக், எக்ஸ்சேன்ஜ்
பில்லியன் கேப்ட்சர் ப்ளஸ் ஸ்மார்ட்போனை எச்டிஎப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் சலுகை கிடைக்கும். மேலும் ரூ.12,999/- வரையிலான எக்ஸ்சேன்ஜ் சலுகை மற்றும் லெனோவா கே5 நோட், ஹானர் 6எக்ஸ் மற்றும் ரெட்மீ நோட் 3 ஆகிய கருவிகளுக்கு ரூ.1,000/- கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும்.

தள்ளுபடி
பில்லியன் வரம்புக்குட்பட்ட உற்பத்திகளில் 20 சதவிகித தள்ளுபடியும் மற்றும் ப்ளிப்கார்ட்டின் ஸ்மார்ட்பை தயாரிப்புகளில் 60 சதவிகித தள்ளுபடி கிடைக்கும். ஐடியா செல்லுலார் நிறுவனத்திலிருந்து 60 ஜிபி கூடுதல் தரவுகளும், சோனிலைவ் ப்ரீமியத்திற்கான 3 மாத சந்தாவும், ரூ. 249/- மதிப்புள்ள 10 பிரயாணங்களுக்கான ஓலா ஷேர்பாஸ் ஆகியவைகளும் கிடைக்கும்.

வடிவமைப்பு
அம்சங்களை பொறுத்தமட்டில், இந்த அனைத்து புதிய பில்லியன் கேப்ட்சர் + ஆனது உலோக உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் எளிதான பிடிமானத்திற்கான வட்டமான மூலைகளையும் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு
ப்ளோட்வேர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ மேம்படுத்தல்கள் கிடைக்காது என்ற வாக்குறுதியுடன் இந்த ஸ்மார்ட்போன் ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது.

டிஸ்பிளே
இது .5டி டிராகன்டெயில் கிளாஸ் பாதுகாப்பு கொண்ட 5.5-இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் இது 401பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு
3ஜிபி மற்றும் 4ஜிபி அளவிலான ரேம் உடன் இணைந்த ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவையும் இ இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.

பேட்டரி
இது ஒரு 3500எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதன் பேட்டரி ஆயுள் இரண்டு நாட்கள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இது பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடனான யூஎஸ்பி டைப் சி-ஐ ஆதரிக்கிறது. சுமார் 15 நிமிடங்களுக்கான சார்ஜ், 7 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குமென்றும் ப்ளிப்கார்ட் கூறுகிறது.


Click it and Unblock the Notifications