இதைவிட கம்மி விலையில் Vivo 5ஜி போன் கிடைக்காது.. ஆபர் போட்டு அதிரடி காட்டும் பிளிப்கார்ட்.!
பிளிப்கார்ட் தளத்தில் Big Saving Days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிளிப்கார்ட் அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஜூலை 19-ம் தேதி வரை நடைபெறும்.
மேலும் இந்த சிறப்பு விற்பனையில் விவோ நிறுவனத்தின் அசத்தலான 5ஜி போனுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ டி2எக்ஸ் 5ஜி (vivo T2x 5G)ஸ்மார்ட்போன் முன்பு ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் இந்த போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது விவோ டி2எக்ஸ் 5ஜி போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
மீடியாடெக் Dimensity 6020 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் குறைந்த எடையுடன் வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
விவோ டி2எக்ஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல அசத்தலான அம்சங்களுடன் இந்த விவோ போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








