ஒவ்வொரு 5G போன் மீதும் 11-க்கு மேற்பட்ட சலுகை! Flipkart-ல் சலுகை மழை! இதான் நல்ல சான்ஸ் மக்களே!
பட்ஜெட் விலையில் பெஸ்டான 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் ஐடியா இருக்கிறதா? அப்படியானால், Flipkart நிறுவனத்தின் இந்த சிறப்பு சேமிப்பு விற்பனை தினத்தை நழுவவிடக்கூடாது. இந்த விற்பனையில், தலைசிறந்த பிராண்டுகளின் 5ஜி டிவைஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளது. அவற்றை பற்றி பார்க்கலாம்.
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் தளத்தில், பிக் சேவிங் டேஸ் விற்பனையை (Flipkart Big Saving Days Sale) நடந்து வருகிறது. இந்த ஐந்து நாள் விற்பனை மார்ச் 11 ஆம் தேதி முதல் துவங்கி இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் தலைசிறந்த பிராண்டுகளான Vivo, Poco, Redmi மற்றும் பிற பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களின் மீது தாராளமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

5G போன்கள் மீது நம்ப முடியாத தள்ளுபடி! ஒவ்வொரு போன் மீதும் 11-க்கும் மேற்பட்ட சலுகையா?
இந்த சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு சுமார் 11 விதமான சலுகை மற்றும் தள்ளுபடி கிடைக்கிறது. கட்டணமில்லா EMI, முழுமையான மொபைல் பாதுகாப்பு, வங்கி சலுகைகள், கேஷ் பேக் நன்மை, எக்ஸ்சேஞ் சலுகை என்று பலவற்றை நீங்கள் பெற முடியும். இப்போது ரூ.20,000 என்ற பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் பெஸ்டான லேட்டஸ்ட் 5ஜி டிவைஸ்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். புதிய 5G போனை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த டீல்களை தவறவிடாதீர்கள்.
1. Poco X4 Pro 5G
Flipkart பட்டியலின் படி, Poco X4 Pro 5G போனின் விற்பனை விலை ரூ. 15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்புடன் Qualcomm Snapdragon 695 ஆக்டா கோர் சிப்செட் உடன் வருகிறது. இந்த போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 6.67' இன்ச் முழு HD+ சூப்பர் AMOLED டிஸ்பிளேயுடன் முன்பக்கத்தில் 16MP கேமராவைக் கொண்டுள்ளது. இதன் மீது 12 விதமான வெவ்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. Moto G73 5G
Moto G73 5G என்பது நிறுவனத்தின் சமீபத்திய போன் ஆகும். இதன் அசல் விலை ரூ.18,999 மட்டுமே. ஆனால், இதன் மீது ரூ.3,000 சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது MediaTek Dimensity 930 சிப்செட் உடன் 5ஜி இல் இயங்குகிறது. இது 6.5' இன்ச் FHD+ உடன் கூடிய 120Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 16 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்.

3. Vivo T1 Pro 5G
விவோ டி1 ப்ரோ சாதனத்தின் அசல் விலை ரூ.23,999 ஆகும். இதன் மீது இப்போது ரூ. 4,991 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சாதனம் 5ஜி இணக்கத்துடன் 4,700mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. இது Qualcomm Snapdragon 778 5G சிப்செட் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8MP மற்றும் 2MP சென்சார்களுடன் இணைக்கப்பட்ட 64MP டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் மீதும் 11 விதமான சலுகைகள் கிடைக்கிறது.
4. Infinix Hot 20 5G
இந்த Infinix Hot 20 5G சாதனம் இப்போது 36% தள்ளுபடிக்குப் பிறகு, Flipkart இல் ரூ.11,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இது MediaTek Dimensity 810 சிப்செட் உடன் 5ஜி இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.6' இன்ச் கொண்ட முழு HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது ஸ்பேஸ் புளூ மற்றும் பிளாஸ்டர் கிரீன் வண்ண வகைகளில் வருகிறது.
ரூ.20,000 பட்ஜெட் விலைக்குள் புதிய 5ஜி சாதனத்தைக் கூடுதல் சலுகையுடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பிளிப்கார்ட் விற்பனையை நழுவவிடக் கூடாது. ஒவ்வொரு சாதனத்தின் மீதும் 11-க்கும் மேற்பட்ட சலுகைகள் கிடைப்பதனால், மிகவும் குறைந்த விலையில் புது போனை வாங்க வாய்ப்புள்ளது. இந்த சலுகையைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்வது உங்களின் திறமையாகும்.


Click it and Unblock the Notifications








