Home
Mobile

அசுஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க சரியான நேரம்.! அதிரடி விலைகுறைப்பு.!

அசுஸ் நிறுவனத்தின் அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிளிப்கார்ட் வலைதளத்தில் Mobiles Bonanza saleஎனும் தலைப்பில் இந்த சிறப்பு விலைகுறைப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

 பிப்ரவரி 17(இன்று) முதல்

மேலும் பிளிப்கார்ட் தளத்தில் பிப்ரவரி 17(இன்று) முதல் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வரை இந்த சிறப்பு விலைகுறைப்பு சலுகை நடைபெறும் என அசுஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சிறப்புவிற்பனையில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 10சதவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

அசுஸ் 6இசட் (Asus 6Z)

அசுஸ் 6இசட் (Asus 6Z)

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் Mobiles Bonanza sale விற்பனையில் அசுஸ் 6இசட்ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.4000-வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 6இசட் ஸ்மார்ட்போனை ரூ.23,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரிகொண்ட அசுஸ் 6இசட் மாடலை ரூ.26,999-விலையில் வாங்கிட முடியும். பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 6இசட் மாடல் ரூ.30,999-க்கு கிடைக்கிறது. குறிப்பாக இந்த சாதனம் 48எம்பி பிரைமரி கேமரா ஆதரவு, 6.4-இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 855சிப்செட் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

அசுஸ் 5இசட் (Asus 5Z)

அசுஸ் 5இசட் (Asus 5Z)

பிளிப்கார்ட் தளத்தில் இந்த அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசட் மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட அசுஸ் 5இசட் ஸ்மார்ட்போனை
18,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி, முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1

அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1

பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனுக்கு 500வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3ஜிபி ரேம் கொண்ட அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 ஸ்மார்ட்போனை ரூ.6,999-விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலை ரூ.7,999-விலையிலும்
வாங்க முடியும். மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட அசுஸ் மேக்ஸ் ப்ரோ எம்1 மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

அசுஸ் மேக்ஸ் எம்2

அசுஸ் மேக்ஸ் எம்2

பிளிப்கார்ட் தளத்தில் அசுஸ் மேக்ஸ் எம்2 மாடலுக்கு ரூ.500-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட அசுஸ் மேக்ஸ் எம்2 மாடலை ரூ.6,999-விலையிலும், 4ஜிபி ரேம் மற்றும்64ஜிபி மெமரி கொண்ட அசுஸ் மேக்ஸ் எம்2 மாடலை ரூ.8,499-விலையிலும் வாங்க முடியும். மேலும் இந்தசாதனம் 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 632எஸ்ஒசி சிப்செட், டூயல் ரியர் கேமரா
உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

 சிறப்பு சலுகைகள்

சிறப்பு சலுகைகள்

பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் அசுஸ் மேக்ஸ் எம்1 மாடலுக்கு ரூ.1000-விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதிவிகிதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இஎம்ஐ ஆஃபர், நோ காஸ்ட் இஎம்ஐ வசதி என பல்வேறு சலுகைகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்;கது.

Best Mobiles in India

English summary
Flipkart Mobile Bonanza Sale 2020: Best Offers and Discounts on Asus Smartphones : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X